பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

மாயா விநோதப் பரதேசி

துப்பாக்கியைத் தன்மீது உபயோகிக்கவும் தயாராக இருப்பவர் போல் பயங்கரமான தோற்றத்தோடு தனக்கருகில் வந்து நின்றதைக் கண்ட மாசிலாமணி, போலீஸாரின் நட்பு சிறிதும் நம்பத்தகாதது என்று தனக்குள் எண்ணிக்கொண்டான். ஒருகால் அவர்கள் தன்னைப்பிடித்து சிறைப்படுத்த வந்திருப்பார்களோ என்ற திகில் அவனது மனதில் உதித்துக் கலக்கியது ஆனாலும், அவன் மிகுந்த மனோதிடத்தோடும் குவித்த கையோடும் நின்று இன்ஸ்பெக்டரை நோக்கி, அவர் கடைசியாகக் கேட்ட (கேள்விக்கு நயமாக மறுமொழி கூறத் தொடங்கி, "எல்லாம் தங்கள் தயவினால் சௌக்கியந்தான். எஜமானே! நான் என்ன விசேஷத்தைச் சொல்லப் போகிறேன்! எங்களுக்கு நேரிட்ட பெருத்த அவமானத்துக்குப் பிறகு, நான் வீட்டை விட்டு வெளியில் போகிறதையே விட்டு விட்டேனே! இதோ இந்த ஜெவான்கள் எல்லோரும் தினந்தினம் இராத்திரி பகல் வந்து என்னைப் பார்த்துக் கொண்டு போகிறார்களே! நான் சிவனே என்று பொழுதைப் போக்கிக் கொண்டிருக்கிறேன் என்பது இவர் களுக்கெல்லாம் தெரிந்த விஷயந்தானே! நான் சமாசாரப் பத்திரிகைகளைக்கூட பிரித்துப் பார்க்காமல் வந்தபடியே போட்டிருக்கிறேன். தாங்கள் ஏது இந்த வெய்யிலில் இவ்வளவு பிரயாசை எடுத்துக் கொண்டு இந்த ஏழையின் குடிசைக்கு விஜயம் செய்தது?" என்று நிரம்பவும் விநயமாகப் பேசினான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் புரளியாகப் புன்னகை செய்து கண்சிமிட்டி மாசிலாமணியின் முகத்தை முன்னிலும் அதிக கூர்மையாக உற்று நோக்கியபடி, "என்ன மாசிலாமணிப் பிள்ளை! ரகசியத்தை உம்முடைய முகமே நன்றாக வெளியிடுகிறதே! அப்படி இருக்க, ஒன்றையும் அறியாதவரைப் போல இப்படி மறைத்து மறைத்துப் பேசுகிறீரே! நான் எப்போதும் உங்கள் குடும்பத்துக்கு அனுகூலமாக இருந்து வந்தவன். உமக்குக் கலியாணம் நடத்த ஏற்பாடு செய்திருந்த காலத்தில் உம்முடைய எதிரிகள் வந்து என் மனசை எவ்வளவோ கலைக்க முயன்றார்கள். அதற்கெல்லாம் நான் கொஞ்சம்கூட அசையவில்லை. கடைசி வரையில் நான் உங்கள் பக்கத்திலேயே உறுதியாக இருந்து, உங்களுக்கு உதவிசெய்ய வேண்டும் என்று