பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

79

படாத பாடெல்லாம் பட்டேன். கடைசியில் உம்முடைய தமையனாரே வந்து, அந்தப் பெண்ணின் விஷயத்தில் இனி யாதொரு நடவடிக்கையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். அதன் பிறகு தான் நான் பேசாமல் இருந்தேன். உங்கள் தமையனாருக்கும் உமக்கும் ஏதோ கால வித்தியாசத்தினால் சிறைவாசம் ஏற்பட்டதென்ற எண்ணத்தையே நான் இதுவரையில் கொண்டு உங்கள் விஷயத்தில் பட்சம் மறவாமல் இருந்து வந்திருக்கிறேன். அதுவுமன்றி உம்மிடம் கடுமை காட்டாமல் நிரம்பவும் மரியாதையாகவே நடந்து கொள்ளும்படி இந்த ஜெவான்களுக்கெல்லாம் நான் கண்டிப்பான உ..த்தரவு பிறப்பித்திருக்கிறேன். ஆகையால் என்னை நீர் விரோதி என்றாவது, போலீஸ் இலாகாவைச் சேர்ந்த ஓர் உத்தியோகஸ்தர் என்றாவது எண்ணிக் கொள்ளாமல், எப்போதும் உமக்கு நன்மை செய்யக் கூடிய அந்தரங்க சிநேகிதர் என்று நினைத்துக் கொள்ளும். இப்போதும் உமக்கு யாதொரு கெடுதலும் வராமல் பார்த்துக் கொள்ளுகிறேன். நடந்ததை நடந்தபடி என்னிடம் சொல்லிவிடும், மற்ற விஷயங்களை நான் பக்குவப்படுத்திக் கொள்ளுகிறேன்" என்றார்.

மாசிலாமணி முன்னிலும் அதிக வியப்புற்றவன் போலத் தோன்றி, "எஜமான் பேசுவது எனக்கு நன்றாக விளங்க வில்லையே! தாங்கள் பேசுவதைப் பார்த்தால், ஏதோ விஷயம் நடந்திருப்பதாகத் தோன்றுகிறது! நான் வீட்டுக்கு வந்த இந்தப் பதினோரு மாத காலமாய் நான் எந்தச் சங்கதியையும் காதில் போட்டுக் கொள்ளாமல் உலகத்தையே வெறுத்த பரதேசி போல இருந்து வருகிறேன். வெளியுலகத்தில் என்ன நடக்கிறது என்பதே எனக்குக் கொஞ்சமும் தெரியாது. ஏதாவது புதுமையான சங்கதி நடந்திருந்தால், அதைத் தாங்கள் சொல்லத்தான், நான் தெரிந்து கொள்ள வேண்டும். தாங்களும், இந்த ஊரில் உள்ள எல்லாப் போலீஸ் உத்தியோகஸ்தர்களும் எங்களிடம் எப்போதும் மாறாத அபிமானமும் மதிப்பும் உடையவர்கள் என்பது பிரசித்தியான விஷயம். அதை நானே சொன்னால் முகஸ்துதி செய்கிறேன் என்று எஜமான் நினைத்துக் கொள்ளப் போகிறீர்களே என்ற எண்ணத்தினால், நான் அந்தப்