பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

81

குள்ளநரியின் வேலையைக் காட்டினால் தப்ப முடியாது. நல்ல மாதிரியாய் ஒழுங்கான வழியில் வந்தால், தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போகும்படி ஏதாவது என்னால் ஆன சகாயம் செய்வேன். மறுபடியும் உமக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுக்கிறேன். நீர் நன்றாக யோசனை செய்து நிஜ சங்கதி எதையும் மறைக்காமல் என்னிடம் சொல்லிவிடும். நீரும் நானும் தனியாக இருந்து பேச வேண்டும் என்ற பிரியம் ஒரு வேளை உமக்கிருந்தால், அதன்படியும் நான் நடக்கத் தடையில்லை. பேசுவதை, அவசரப்படாமல் நிதானமாகவும் ஐந்திரண்டுக்குப் பழுதில்லாமலும், பேசுவது எப்போதும் நலமானது. முழுப் பூசணிக்காயை இலைச் சோற்றில் மறைத்துப் பேசுவதில், யாதொரு பிரயோசனமும் ஏற்படப் போகிறதில்லை. அதை மூடன் கூ... ஒப்புக்கொள்ள மாட்டான்" என்றார்.

மாசிலாமணி முன்னிலும் டன் மடங்கு அதிகரித்த வியப்பும் பிரமிப்பும் தோற்றுவித்து இன்ஸ்பெக்டரை நோக்கிக் கைகூப்பிப் பணிந்தவனாய், "எஜமான் என்னைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகளைச் சொல்வது என்னுடைய கால வித்தியாசத்தின் பலன் என்றே நினைக்கிறேன். ஏதோ சங்கதி நடந்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஒன்றையும் அறியாதவன் போல் தங்களிடம் நான் பாசாங்கு செய்து தங்களை ஏய்க்கிறதாகத் தாங்கள் அபிப்பிராயப்படுகிறீர்கள் போல் இருக்கிறது. நான் சொன்ன வார்த்தைகள் எல்லாம் என் மனப்பூர்வமாகச் சொல்லப் பட்ட உண்மையான வார்த்தைகளே அன்றி, கொஞ்சமும் வித்தியாசமே கிடையாது. நான் ஜெயிலுக்குப் போகிறதற்கு முன்பாவது என் மனசில் ஒருவித இறுமாப்பும், தான் என்ற ஆணவமும், பணத்திமிரும், நாம் அதிக புத்திசாலி ஆகையால் மற்றவர்களை ஏமாற்றி விடலாம் என்ற ஒருவித அசட்டுத் துணிவும் இருந்தன. ஜெயிலில் ஒரு வருஷகாலம் இருந்து வந்த பிறகு அந்தத் துர்க்குணங்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் போய் விட்டன. உலகத்தில் ஒவ்வோர் அம்சத்திலும் நம்மைவிட மேலான மகாதுபாவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள் என்ற அச்சமும், நாம் சற்குணத்தோடு நேரான வழியில் நடக்கிறதற்கு மிஞ்சின மனோபலமும், ஜெயமும் வேறு எதிலும்

மா.வி.ப.I-7