பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

மாயா விநோதப் பரதேசி

வடிவாம்பாள்:- இந்தப் பதுமை தங்களைப் போலவே இருப்பதோடு, உயிரோடிருக்கும் மனிதர் மாதிரியே இருக்கிறதே! - நாங்கள் அதைப் பார்த்தவுடனே, தாங்கள் தான் வேறே குறுக்கு வழியாகப் போய் அங்கே படுத்துக் கொண்டிருக்கிறீர்கள் : என்றல்லவா எண்ணிவிட்டோம்.

கண்ணப்பா:- அது மரத்தினால் தானே செய்யப்பட்டிருக்கிறது?

சாமியார்:- இல்லை, ஆட்டுத்தோலை மனித உருவம் போலத் தைத்து, உள்ளே பஞ்சை அடைத்துத் தைத்திருக்கிறான். என்னென்ன வர்ணங்கள் கலந்தால் என்னுடைய உடம்பின் நிறம் உண்டாகும் என்பதைக் கண்டுபிடித்து, அந்த வர்ணங்களை எல்லாம் சேர்த்துக் குழைத்துத் தேன் மெழுகில் கலந்து பிசைந்து அந்த மெழுகை உபயோகப்படுத்தி முகத்தில் உள்ள கண்கள் மூக்கு வாய் முதலிய உறுப்புகளை எல்லாம் செய்திருக்கிறான். உடம்பு முழுதும், அந்த வர்ணங் கலந்த மெழுகு தடவப் பட்டிருக்கிறது. தொட்டுப் பார்த்தால், மனிதனுடைய உடம்பு போலே மிருதுவாக இருக்கும்.

கண்ணப்பா:- ஓகோ! அப்படியா? பொம்மை நிரம்பவும் சாமர்த்தியமாகச் செய்யப்பட்டிருக்கிறது. அதை வைத்துப் பகலில் நாம் தூக்கிக்கொண்டு போனால் கூட ஜனங்கள் உண்மையில் தாங்களே போகிறீர்கள் என்றுதான் எண்ணிக் கொள்ளுவார்கள். ஆனால் அதன் முகத்தை உற்றுப்பார்க்கிறவர்கள், தாங்கள் உயிரோடு படுத்திருக்கிறீர்கள் என்று நினைத்துக் கொள்ளுவார்களேயன்றி, இறந்து போய்விட்டதாகச் சொல்வதைக் கொஞ்சமும் நம்பமாட்டார்கள். அதுவுமன்றி பாடையிலிருந்து அதை எடுத்து ஜதையில் வைக்கும் போது அது பொம்மை என்பது உடனே தெரிந்து போகும். எல்லாவற்றையும் யோசிக்க, தாங்கள் முடிவு செய்தது போல, இரவில் மற்ற யாரும் வராதபடி செய்து நாம் காரியத்தை முடிப்பதே நல்லது.

வடிவாம்பாள்:- இந்தத் தந்திரம் எல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும் சுவாமியார் இறந்து போய்விட்டார்கள் என்ற அசுபமான வார்த்தை சொல்வதும், அப்படிப்பட்ட