பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

மாயா விநோதப் பரதேதி


மாசிலாமணி:- என்ன சேர்வைகாரரே! எதற்கும் அஞ்சாமல் யோசனை சொல்லக்கூடிய மகா தீரரான நீர்கூட மலைப்ப தென்றால், அது எனக்கு நிரம்பவும் வெட்கமாக இருக்கிறது. இதோ நம்முடைய ரமாமணி இருக்கிறாளே. அவள் எப்பேர்ப்பட்ட அரிய காரியத்தை முடித்தாள் என்பதை மறந்து போய் விட்டீரோ அவள் ஒருத்தியே போய் இந்தக் காரியத்தை முடித்துக் கொண்டு வருவாளே. போகட்டும். உங்களுக்கு அவர்களுடைய அடையாளம் தெரியாதென்று சொல்லுகிறீர். அது ஒப்புக் கொள்ளக்கூடிய ஆட்சேபனையே. நீர் ஒரு காரியம் செய்யும். நான் நம்முடைய ரமாமணியையும் உம்மோடு பட்டணத்திற்கு அனுப்புகிறேன். அவள் வடிவாம்பாள் முதலிய எல்லோரையும் பார்த்திருக்கிறாள். மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை வீட்டாருடைய அடையாளம் எல்லாம் அவளுக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இவள் இன்னாள் என்பது அவர்களுக்குத் தெரியாது. ஆகையால், இவள் பெரிய மனிதர் வீட்டுப் பெண் போலத் தன்னை நன்றாக அலங்கரித்துக் கொண்டு வெள்ளிக் கிழமை அன்று கலியானக் கும்பலில் நுழைந்து கொள்ளட்டும். பிள்ளை வீட்டார் இவள் பெண் வீட்டைச் சேர்ந்தவள் என்று நினைத்துக் கொள்வார்கள். பெண் வீட்டார் இவள் பிள்ளை வீட்டைச் சேர்ந்தவள் என்று நினைத்துக் கொள்வார்கள். ஆகையால் இவளை "நீ யார்" என்று யாரும் கேட்கப் போகிறதில்லை. இவள் நன்றாகப் பாட்டுப் பாடுவாள் என்பது உமக்குத் தெரியுமே. ஆகையால் பெண்ணுக்கு நலங்கு முதலிய காரியங்கள் நடக்கும் போது, இவள் நுழைந்து கொண்டு பாட்டுப் பாடி எல்லாக் காரியங்களையும் முனைந்து செய்து, வடிவாம்பாளோடு பழக்கம் செய்து கொள்ளும்படி செய்கிறேன். இவள் மகா தந்திரி ஆகையால், எவரும் தன்மேல் சந்கேகப்படாதபடி, காரியங்களை நடத்தி எல்லோருடைய பிரியத்தையும் ஒரு நொடியில் சம்பாதித்துக் கொள்வாள். இவள் வெள்ளிக்கிழமை இரவில் வேலாயுதம் பிள்ளை வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளோடு கூடவே இருக்கும்படி செய்கிறேன். இரவில் எல்லோரும் துங்கிய பிறகு நடு இரவில் இவள் மெதுவாக எழுந்து வந்து வாசற்கதவின் உள்