பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

மாயா விநோதப் பரதேதி

மாசிலாமணி படிக்கட்டின் முடிவை அடைந்து கூடத்தில் நுழையும் வரையில் மூடப்பட்டிருந்த பள்ளியறையின் கதவுகள் உடனே திடீரென்று திறந்துவிடப்பட்டன. அந்தப் பள்ளியறை யின் உள்பக்கத்து அமைப்பையும் அலங்காரங்களையும் உள்ளபடி விவரித்துக் கூறுவது சாத்தியமற்ற காரியம் என்றே சொல்ல வேண்டும். அவ்விடத்தில் காணப்பட்ட வில் வைத்த பெருத்த கட்டில் அந்த அறை முழுதையும் நிரப்பிக் கொண்டிருந்ததன்றி, அதன் மீது ஒரே காலத்தில் பத்து மனிதர் சயனித்துக் கொள்ளத் தகுந்த இடவசதி பெற்றதாய்க் காணப்பட்டது. அதன் மீது வெல்வெட்டு போர்த்தப் பெற்றதும், ஒருமுழ உயரமுள்ளதுமான மிருதுவான மெத்தையும், இருபது இருபத்தைந்து தலையணை திண்டு தினுசுகளும் காணப்பட்டன. அந்த அறை முழுதும் அத்தர், ஜவ்வாது, ஊதுவர்த்தி, பன்னி, ரோஜாப்புஷ்பம், ஜாதிமல்லிகைப் புஷ்பம் முதலியவற்றின் ஒன்று கூடிய பிரம்மாநந்தமான மணம் கமகம என்று கமழ்ந்து அவ்விடம் வருவோரது மனத்தை மயக்கிப் பரவசப்படுத்தும் தன்மையதாயிருந்தது. சுவர்கள் முழுதும் நிலைக் கண்ணாடிகளே நிறைந்திருந்தமையால் கட்டிலும் அதன் மேல் உள்ள மனிதர் வடிவமும் அந்தக் கண்ணாடிகளிற்குள் பலவாய்ப் பெருகி, மனதை பிரமிக்கச் செய்ததோடு, அந்தப் பள்ளியறையின் அலங்காரத்தை ஆயிரம் மடங்கு பெருக்கிக் காட்டின. அந்த அறையின் மேல் பக்கம் முழுதும் ஜரிகைத் துய்யாக்களால் நிரம்பவும் விநோதமான ஒட்டு வேலைகள் செய்யப் பெற்றிருந்த தன்றி, லீலா விநோதங்களும், சிருங்காரக் காட்சிகளும் நிறைந்த எண்ணிறந்த படங்கள் பல தேசங்களில் இருந்து வரவழைக்கப் பெற்று மேற்பக்கம் முழுதிலும் மாட்டப் பெற்றிருந்தன. மனிதர் கட்டிலின் மீது சயனித்தபடி தமது பார்வையை மேல் பக்கம் திரும்பினால், அவர்களது திருஷ்டியில், அந்தப் படங்களில் நிறைந்துள்ள பல தேசத்து வடிவழகியரும் தமது காதலர்களோடு நடாத்தும் கலவிப்போரின் அதிசயக் காட்சிகள் எல்லாம் தத்ரூபம் கண்கூடாய்த் தோன்றுவதாய் அமைந்திருந்தன. சுவர்களில் பொருத்தப் பட்டிருந்த நிலைக் கண்ணாடிகளுள் சிலவற்றில்