பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

115


வக்கீல் வசித்து வந்தார். அவர் நிரம்பவும் கீர்த்தி வாய்ந்த பிரபல வக்கீலாக இருந்து மகா திறமைசாலி என்று எல்லோராலும் புகழப் பெற்று வந்தார். அவர் எடுத்துக் கொண்ட வழக்கு தோற்றுப் போனதென்ற இழுக்கே அவருக்கு ஒரு நாளும் உண்டான தில்லை. கண்ணிற்கெதிரில் கொலை செய்தவர்களும், அயலான் மனைவியைப் பலவந்தமாகக் கற்பழித்தவர்களும், கொள்ளை அடித்தவர்களும், பொய்க் கையெழுத்துச் செய்தவர்களும், இன்னும் இவை போன்ற பெரும் பெரும் குற்றங்களைச் செய்தவரும் அந்த வக்கீலின் அபார சாமர்த்தியத்தினால் நிரபராதி களாய்ப் போய்த் தப்பித்துக் கொண்டனர். அத்தகைய பரோப காரியான வக்கீலின் வீட்டில் ஆயிரம் ஆயிரமாக பொருள் வந்து குவிந்து கொண்டிருந்தது என்பதைச் சொல்வது மிகையாகும். ஆனால் அவருக்கு ஒரு கெட்ட பழக்கம் ஏற்பட்டு அது காலக் கிரமத்தில் பெருத்த பைத்தியமாக முற்றிப் போய் விட்டது. அதாவது சீமையில் இருந்து வரும் மதுபானங்களில் அவருக்கு எப்படியோ பரிச்சயம் ஏற்பட்டு இரண்டொரு வருஷத்தில் அது முற்றிப் பெருத்த பேய்போல அவரைப் பிடித்துக் கொண்டது. அதனால் அவருக்கு இயற்கையான ஆகாரத்தில் வெறுப்பு ஏற்பட்டுப் போனது. ஆகையால், காலக்கிரமத்தில் அவர் அன்னம், தண்ணிர் முதலிய எந்த வஸ்துவையும் உட்கொள்வதையே அடியோடு விட்டுவிட்டார். எப்போதும் சீமை மதுவையே ஜீவாதாரமாக மதித்து அவர் அருந்திக் கொண்டு வந்தார். எப்போதும் அவரது கண்கள் கோவைப்பழம் போலச் சிவந்தே காணப்பட்டன. அவர் தமது வீட்டில் இருக்கும் போது ஓயாமல் குடித்து மயங்கிப் படுத்த படுக்கையாகவே இருப்பார். கச்சேரிக்குப் போகும் காலத்தில் அவரது சட்டைப் பைக்குள் இரண்டொரு புட்டிகள் ஊஞ்சலாடிக் கொண்டே இருக்கும். கச்சேரியில் நியாயாதிபதி அப்புறம் இப்புறம் திரும்பும் சமயத்தில், இவர் மேஜையின் மறைவில் தமது வாயை வைத்து மதுப் புட்டியைத் திறந்து இரண்டொரு வாய் இழுத்துத் தனக்கு சுறுசுறுப்பை உண்டாக்கிக் கொண்டே எழுந்தெழுந்து வாதாடுவார். அத்தகைய பரிதாபகரமான மனிதர் என்ன