பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

மாயா விநோதப் பரதேதி

முன்னதாகவே உப்பரிகையை அடைந்து மாசிலாமணியின் வருகையை நிரம்பவும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தாள். அவனைக் காண அவளது மனதும், முகமும் மலர்ந்தன. கண்கள் முழி மிரட்டின. வலது கை அவனை வருந்தி அழைத்தது. அன்றைய தினம் இரவில் அவன் அவளது வீட்டிற்குள் நுழைந்துவிட்டான். முழுமனதோடு இருவரும் வெகு சுலபத்தில் அந்தரங்கமான காதலர் ஆகிவிட்டனர். இராக்காலங்களில் வக்கீல் வீட்டில் இருப்பதைக் கருதி, அவர்கள் பகற்காலங்களில் ஒளிவு மறைவாக ஒருவரை ஒருவர் சந்தித்து ஆனந்தமாக இருந்து வந்தனர். ரமாமணியம்மாள் நிரம்பவும் மூர்க்கமான ஆசா பாசங்களைக் கொண்டவளாக இருந்தாள். ஆதலால், இராக் காலங்களிலும் மாசிலாமணியோடு சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற விலக்க முடியாத பலத்த ஆசையும் ஆவலும் அடைந்து, அது விஷயத்தில் மாசிலாமணியோடு யோசனை செய்து, அவனது சொற்படி, வக்கீல் குடிக்கும் சீமை மதுவில் விஷத்தைக் கலந்து வைத்துவிட்டாள். குடிவெறியில், எதையும் உணராது மேன்மேலும் அதை அருந்திய வக்கீல் அன்றைய இரவில் பரலோகப் பிராப்தி அடைந்து விட்டார். அவர் மிதமிஞ்சிக் குடித்ததால் திடீரென்று இறந்து போய்விட்டார் என்ற வதந்தியைக் அவள் பரப்பிவிட்டு அண்டைவீட்டு மனிதர்களின் உதவியைக் கொண்டு நிரம்பவும் துரிதமாகப் பிணத்தை எடுத்துப் போய் தகனம் செய்து வக்கீலின் தேகத்தைச் சாம்பலாக்கி விட்டு நிம்மதியாக வீடு சேர்ந்து, வக்கீல் குடித்தழித்தது போக மிகுதி இருந்த பொருள்களுக்கு எல்லாம் எஜமானியானாள். அவளது சொந்த ஊரில் ஏழ்மை நிலைமையில் உழன்று கொண்டிருந்த வயோதிகர்களான தாய் தந்தையர் உடனே அவளது வீட்டிற்கே அழைத்துக் கொள்ளப்பட்டனர். வக்கீலின் அந்தியகாலச் சடங்குகள் நிறைவேறிய மறுதினம் முதல் மாசிலாமணியே அவளையும் அவளது வீட்டு நிர்வாகங்களையும் எல்லோரும் அறிய பகிரங்கமாக ஏற்றுக் கொண்டு அவளைத் தனது உயிருக்குயிரான ஆசை நாயகியாக வைத்துக் கொண்டான். அவளது. அற்புதமான அமுகில் அவன் மதிமயங்கிப் போய் அவள் குடியிருந்த பெருத்த மெத்தை வீட்டை விலைக்கு வாங்கி அவள்