பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

மாயா விநோதப் பரதேதி

உங்களை எனக்குத் தெரியும். நீங்கள் நல்ல மனிதர்கள் தான். உங்களை யார் இங்கே கூப்பிட்டது" எனறாள்.

அதைக் கேட்ட மாசிலாமணி நிரம்பவும் கொஞ்சலாகவும் நயமாகவும் பேசத்தொடங்கி, "என்ன கண்ணே! இப்படிப் பேசுகிறாய்? இதற்குள் உனக்கு என்மேல் என்ன கோபம் வந்து விட்டது? நேற்று இரவில் நான் வந்துவிட்டுப் போனபோது, சாதாரணமாக இருந்த நீ இதற்குள் இப்படி மாறிப் போகக் காரணம் என்ன? ஏன் தூரப்போகிறாய்? வா இப்படி; என் பக்கத்தில் வந்து உட்கார்ந்து கொண்டு, சங்கதியைச் சொல்; உன் மன வருத்தத்தை நான் உடனே தீர்த்து வைக்கிறேன்" என்று இளக்கமாகக் கூறிய வண்ணம் அவளது இடுப்புச் சேலையைப் பிடித்து பலமாக இழுக்கத் தொடங்கினான். ரமாமணி முன்னிலும் அதிக மூர்க்கமாகப் பிணங்கி அவனது இழுப்பிற்கு வராமல் பலமாகத் தனது உடம்பை அப்பால் இழுத்துக் கொண்டவளாய்த் தனது சேலையை எடுத்து முகத்தில் போட்டுக் கண்களைக் கசக்கிக் கொண்டு தேம்பித் தேம்பி அழத் தொடங்கினாள். மடை திறந்து விட்டது போல, அவளது கண்களில் இருந்து கண்ணி முத்து மாலைகள் போல சரம்சரமாகக் கீழே உதிரத் தொடங்கியது. "என் மனதைக் கவர்ந்த ஆசை வடிவமான தவில்கார வடிவழகனைத் துரத்தி விட்டு இந்த நொண்டிச் சண்டாளன் என்னைப் பிடித்து. இழுக்கிறானே" என்று அவளது மனம் எண்ணித் துயரமுற்றது. ஆனாலும், அவள் வாயைத் திறந்து மாசிலாமணிக்குக் கேட்கும்படி, "சரிதான் போங்கள். எனக்கும் உங்களுக்கும் இனி என்ன இருக்கிறது? எல்லாம் தீர்ந்து போய்விட்டது. பட்டணத்தில் இருந்து புதிய சரக்கை வீட்டிலேயே கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் இங்கே வந்ததைப் பற்றி அவள் கோபித்துக் கொள்வாள். நீங்கள் போய் முதலில் அவளைச் சமாதானப் படுத்துங்கள். நான் தான் கழிபட்டவளாய் விட்டேன். இனி எனக்கென்ன பெருமை? எல்லா உபசாரமும் அவளுக்கே நடக்கட்டும். என்னை ஏன் இழுக்கிறீர்கள்? எழுந்து போங்கள். நீங்கள் வரவில்லை என்று அவள் வழிபார்த்து ஏங்கி இருக்கிறாளாம்?" என்று கோபமாகவும் மழலையாகவும் பேசிவிட்டுத் தனது முதுகுப் பக்கத்தை