பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

125

அவனுக்கெதிரில் திருப்பியபடி அப்பால் திரும்பிக் கொண்டாள். உடனே மாசிலாமணி அவளது கோபத்தின் காரணத்தை ஒருவாறு உணர்ந்து கொண்டவனாய் முன்னிலும் அதிக உற்சாகமும் துணிவும் அடைந்து, "அடெ அசடே போ. உன்னைப் போன்ற பெருத்த பைத்தியக்காரியை நான் பார்த்ததே இல்லை. பட்டணத்தில் இருந்து மனோன்மணியைக் கொண்டு வந்து அவளைக் கலியாணம் செய்வது போல நடித்து அவளது கொட்டத்தை அடக்கி அனுப்ப வேண்டும் என்று நீயே சொன்னாய். உன்னுடைய சம்மதியின் மேல், எல்லாக் காரியமும் நடந்திருக்கிறது. அப்படி இருக்க, நீயே இப்போது கோபித்துக் கொள்ளுகிறாயே! அப்படித்தான், எங்களுக்குள் ஏதாவது பிரமாத மான சிநேகம் ஏற்பட்டுவிட்டதா. ஒன்றுமில்லையே! எவ்வித காரணமும் இல்லாமல், நீ உன் மனசைப் புண்படுத்திக் கொள்ளு கிறாயே" என்றான்.

உடனே ரமாமணி, "ஓகோ! எனக்கொன்றும் தெரியாதென்று என்னை ஏமாற்றப் பார்க்கிறீர்களோ! மனோன்மணியையா நீங்கள் கொண்டு வந்து வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்? நான் இன்றைய தினம் வந்த பத்திரிகையைப் படிக்கவில்லை என்று நினைத்துக் கொண்டீர்களா? இந்தப் பெண் மனோன்மணியை விட அதிக அழகுடையவளாய் இருக்கிறாள் என்று கண்டே நம்முடைய இடும்பன் சேர்வைகாரன் இவளைத் தூக்கிக் கொண்டு வந்து உங்களிடம் கூட்டிக்கொடுத்து விட்டு, பெருத்த இனாம் வாங்கிக் கொண்டிருக்கிறான். உங்களுடைய சூதெல்லாம் எனக்குத் தெரியாதென்று நினைத்துப் பேசுகிறீர்களா இவ்வளவு காலம் உங்களோடு கூட இருந்து நான் பழகவில்லையா? என்னை நீங்கள் "அசடே" என்று சொன்னதைப் பற்றி எனக்கு வருத்தமில்லை. மற்ற எல்லா விஷயங்களிலும் நான் அசடாக இருந்தாலும், இந்த விஷயத்தில் மாத்திரம் அசடல்ல என்று நினைத்துக் கொள்ளுங்கள்" என்றாள். மாசிலாமணி மகிழ்ச்சியோடு புன்னகை செய்து, "உன்னை அசடே என்று சொல்வது போதாது. பைத்தியமே என்று சொல்ல வேண்டும். பட்டணத்தில் இருந்து சமாசாரப் பத்திரிகை கொஞ்ச நேரத்திற்கு