பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

135

அதைக் கேட்ட ரமாமணி அவனை விட்டுப் பிரிந்து போவதைப் பற்றி பெரிதும் ஏக்கமும் விசனமும் கொண்டவள் போல உடனே குன்றிப்போனாள். அவளது குதூகலம் எல்லாம் பெட்டிப்பாம்பாக ஒடுங்கிப் போய்விட்டது. அவள் நிரம்பவும் ஹீனக்குரலாய்ப் பேசத் தொடங்கி, "சரி; உங்களிடம் நான் எதிர்த்து வார்த்தையாடினால், உங்களுக்கு இந்த ஏழையின் மேல் கோபம் வந்துவிடும். உங்களுடைய பிரியப்படியே நடந்து கொள்ளுகிறேன். ஆனால், நான் பட்டணத்தில் அதிக நாள் இருந்து, எந்த வேடிக்கையையும் பார்க்க மாட்டேன். காரியம் முடிந்த மறுதினமே நான் திரும்பி வந்து விடுவேன். நீங்கள் இன்னொரு தடவை என்னோடு பட்டணம் வந்து எனக்கு எல்லா வேடிக்கைகளையும் காட்ட வேண்டும்" என்றாள்.

மாசிலாமணி, "ஓ! தடையில்லை. அப்படியே செய்யலாம்" என்றான்.

ரமாமணி, "என் செலவுக்கு வேண்டிய பணம் இடும்பன் சேர்வைகாரனிடம் இருக்கிறதா, அல்லது, அதை என்னிடமே கொடுக்கப் போகிறீர்களா?" என்றாள்.

மாசிலாமணி, "அவனுக்கும், அவனுடைய ஆள்களுக்கும் தேவையான பணம் மாத்திரம் அவனிடம் இருக்கிறது. உனக்கு வேண்டியதை நீயே வாங்கி வைத்துக்கொள்" என்றான்.

ரமாமணி, "சரி; அப்படியானால், கொடுங்கள். குறைந்தது ஆயிரம் ரூபாயாவது என் கையில் இருக்க வேண்டும்" என்றாள்.

மாசிலாமணி, "இவ்வளவு தானா? நான் உனக்கு இரண்டாயிரம் ரூபாய் கொண்டு வந்திருக்கிறேன். நீ பட்டணத்தைச் சுற்றிப் பார்த்தால், அங்கே காணப்படும் அருமையான வஸ்துக்கள் எதையாவது நீ வாங்க ஆசைப்படுவாய் என்று நினைத்து அவ்வளவு அதிகமான தொகையை எடுத்துக் கொண்டு வந்தேன்" என்றான்.

ரமாமணி, "சரி, நீங்கள் கொண்டு வந்ததை எல்லாம் கொடுத்து வையுங்கள். அது கையோடு காவலாக இருக்கட்டும். எந்தச்