பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

மாயா விநோதப் பரதேசி

சமயம் எப்படி இருக்குமோ. மிச்சம் இருந்தால் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன்" என்றாள்.

மாசிலாமணி, "மிச்சத்தை நீ திருப்பிக் கொடுக்க வேண்டுமா! அசடே போ. என்னுடைய சகலமான ஆஸ்தியையும் நீ கேட்ப தானாலும், நான் உனக்கே கொடுத்து விடுவேனே; அப்படி இருக்க, இந்த அற்பத் தொகையில் மிச்சப்படுவதை நீ எனக்குக் கொடுக்க வேண்டுமா?" என்றான்.

ரமாமணி, "அப்படியா! எனக்கு என்று நீங்கள் கொடுப்பதை மாத்திரம் நான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது எனக்குக் கொடுக்கப்படுவதல்ல. ஆகையால் அப்படிச் சொன்னேன்; கணக்கென்றால், கணக்காக இருக்க வேண்டாமா?" என்றாள்.

மாசிலாமணி, "சரி, போதும் உன் கணக்கு. இதோ இருக்கிறது, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள். எனக்கு நேரமாகிறது. நான் போகிறேன். நீ புறப்படுவதற்குள் நான் உன்னை மறுபடி பார்க்க சௌகரியப்பட்டால் வருகிறேன். இல்லாவிட்டால், நீ புறப்பட்டுப் போகலாம். நான் சொன்னபடி காரியங்களை ஜாக்கிரதையாக முடித்து விட்டு ஜெயத்தோடு நீ திரும்பிவர வேண்டும். இல்லா விட்டால் பார்த்துக்கொள்" என்று வேடிக்கையாகப் பயமுறுத்திக் கூறினான்.

ரமாமணி, "நான் போன காரியத்தில் இதுவரையில் அபஜெயம் ஏற்பட்டதுண்டா ? ஒரு நாளுமில்லை . அப்படி இருக்க, நீங்கள் ஏன் என்னை இப்படி பயமுறுத்த வேண்டும்? காரியம் அபஜெயம் அடைந்தால், என்னை நீங்கள் எப்படிப்பட்ட கொடிய சிட்சைக்கும் ஆளாக்கலாம்" என்று கொஞ்சலாக மொழிந்தாள்.

மாசிலாமணி வேடிக்கையாகப் புன்னகை செய்து, "நீ அபஜெயத்தோடு வந்தால், அவர்களுக்குச் செய்ய வேண்டிய மரியாதையை உனக்கே செய்து விடுவேன்; ஜாக்கிரதை" என்று கூறிவிட்டு, அவ்விடத்தை விட்டு வெளியில் நடக்க யத்தனித்தான்.

ரமாமணி ஆசையோடு பாய்ந்து, அவனைப் பிடித்து இறுகத் தழுவிக் கண்ணீர் சொரிந்து, "இந்த ஆனந்தம் மறுபடி எப்போது