பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

மாயா விநோதப் பரதேசி

போய்விட்டாள். நீங்கள் வந்தபோது நான் உண்மையிலேயே அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தேன். அவள் என்னை எழுப்பி, நீங்கள் வந்திருப்பதாகச் சொன்னாள். கதவைத் திறந்து விடும்படி நான் சொன்னேன். எனக்குச் சொற்ப உணர்ச்சி மாத்திரம் இருந்ததேயன்றி, உடம்பு அலுத்துப் போய் எழுந்திருக்க முடியாத நிலைமையில் இருந்தது. நான் முயன்று முயன்று பார்த்துக் கடைசியில் எழுந்தேன். இப்போது அவள் தயாரித்துக் கொண்டிருக்கும் இரண்டு கடிதங்களையும் சரிபார்த்து அடியில் என்னுடைய கையெழுத்தை வைத்து உறைக்குள் போட்டு ஒட்டி அரக்கு முத்திரை முகர் முதலியவைகளை வைத்து உங்களிடம் கொடுக்கிறேன். அவைகளை நாளைய தபாலிலேயே ரிஜிஸ்டர் செய்து அனுப்பி விடுங்கள். இரண்டு கடிதங்களில் ஒன்று கவர்னருக்கு, மற்றது போலீஸ் இலாகா தலைவருக்கு. அவைகளில் நான் உண்மையான விவரங்களை எழுதி இருக்கிறேன். எதிரிகள் என்னைக் கொல்லும் பொருட்டு, நான்கு நாகப்பாம்புகளை வைத்து, சூபரின்டெண்டெண்டு துரை அனுப்பியது போலப் பொய்க் கடிதம் தயாரித்து அனுப்பியதையும், நான் இந்த அபாயத்தில் இருந்து தப்பிய வரலாற்றையும் எழுதி இருப்பதோடு எதிரிகளை ஏமாற்றும் பொருட்டு, நான் இறந்து போய்விட்டதாகத் தந்திரம் செய்யப் போகிறதாகவும், அதன் பிறகு நான் கொஞ்ச காலம் மறைந்திருந்து சட்டைநாத பிள்ளை முதலியோரைப் பிடித்துச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு, மறுபடி வந்து என்னுடைய உத்தியோகத்தை ஏற்றுக் கொள்ளப் போகிறேன் என்றும், என் மனைவி இரண்டு தினங்கள் இங்கே இருந்து என் தகனம் சஞ்சயனம் முதலிய காரியங்களை நடத்திவிட்டு, குத்தாலத்தில் இருக்கும் தன் தமையனுடைய வீட்டுக்குப் போய் விடுவாள் ஆகையால், மூன்றாவது நாளே இந்த பங்களாவை சர்க்காரார் வசப்படுத்திக் கொள்வதோடு நான் பார்த்து வந்த போலீஸ் உத்தியோகம் காலியாய் இருப்பதாகவும், சாமியாருக்குச் சமதையான திறமையும் பரோபகாரச் சிந்தையும், மற்ற சகல யோக்கிய தாம்சங்களும் வாய்ந்தவர் யாராவது அகப்படுவாரானால், அவர்களுக்கு இந்த உத்தியோகம் கொடுக்கப்படும் என்றும் ஒரு விளம்பரம் தயாரித்து