பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

143

பிள்ளையையும் பிரார்த்தித்து அழைத்துக் கொண்டு தமது இல்லம் வந்து சேர்ந்தனர். வேலாயுதம் பிள்ளை நிரம்பவும் பக்திமான் ஆதலால், அவர் எப்போதும் அதிகாலையில் நீராடி மடி வேஷ்டி அணிந்து சுவாமி பூஜை, சுவாமி ஸ்தோத்திரம் முதலியவற்றையே செய்து கொண்டு விசிப்பலகை மீதிருந்தபடி எல்லா நிர்வாகங்களையும் மேற்பார்வை பார்த்து வந்தார். சகலமான பணச் செலவுகளையும் நடராஜ பிள்ளையே கவனிப்பதென்று அவர்களுக்குள் தீர்மானம் ஆகியிருந்தது. ஆதலால், அவர் ஏராளமான பணத்தை நோட்டுகளாகவும், வேண்டிய அளவிற்கு மேல் எட்டணா, நான்கணா, இரண்டனா, ஓரணா முதலிய சில்லரைகளாகவும் மாற்றி ஒரு கைப்பெட்டியில் வைத்துக் கொண்டு, அப்போதிருந்தே பணமாரி பெய்து வருணபகவானாய் விளங்கிக் கொண்டிருந்தார். எல்லா சாமான்களையும் சேகரித்துக் கொணர்ந்து பெட்டிகளில் வைத்து பத்திரப்படுத்தி ரயிலில் ஏற்றும் நிலைமையில் வைப்பதான சகலமான பொறுப்பையும் கண்ணப்பாவே நிர்வகித்து, ஏராளமான வேலையாட்களை ஏவி ஏவி இரவு பகல் ஓய்வின்றி அரும்பாடுபட்டுக் கொண்டிருந்தான். திகம்பரசாமியார் இறந்து போனதாக அவர்கள் நடித்த தினத்திற்கு பிறகு, அவர்கள் நிச்சயதார்த்தத்திற்குத் தேவையான சாமக்கிரியைகளை எல்லாம் சேகரிப்பதைப் பற்றிக் கவலையுற்றதைவிட, அந்தச் சமயத்தில் திகம்பரசாமியார் மறைந்திருக்க நேர்ந்ததைப் பற்றி அளவற்ற ஏக்கங் கொண்டவர்களாய் இருந்தனர். கடைசியாக திகம்பரசாமியார் தங்களை எச்சரித்துவிட்டுப் போனதற்கு இணங்க, கண்ணப்பா முதலியோர் எதிரிகள் தங்களுக்கு எந்தச் சமயத்தில் எவ்விதமான தீங்கிழைப்பரோ என்று முற்றிலும் விழிப்பாக இருந்ததன்றி, கையும் தடியுமாய் இருபது பண்ணையாட்களை வீட்டின் பின்பக்கத்தில் காவலாக வைத்திருந்தனர். தபாலிலிருந்தும் வேறு எங்கிருந்தும் அவர்களுக்கு வரும் ஒவ்வொரு வஸ்துவையும் நன்றாக ஆராய்ந்து பார்த்தே அவர்கள் ஏற்றுக் கொண்டனர். கண்ணப்பா, நடராஜ பிள்ளை முதலியோர் வீட்டை விட்டு எங்கேயாகிலும் வெளியில் போக நேர்ந்தால், இரண்டு மூன்று ஆட்களையும்