பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

13

பத்திரிகைகளின் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பகிரங்கப்படுத்த வேண்டும் என்றும், நான் கவர்னரைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். துண்டுப் பிரசுரங்களை, கும்பகோணத்தில் சட்டைநாத பிள்ளை இருக்கும் தெருவில் அதிகமாய்க் கொடுக்க ஏற்பாடு செய்யும்படியும் எழுதி இருக்கிறேன் ஆகையால், மேலதிகாரிகள் முதலில் நான் இறந்து போனது உண்மை என்று நம்பினாலும் என் கடிதங்களைப் பார்த்த பிறகு, உண்மையை அறிந்து கொள்வார்கள். இந்த பங்களாவையும் என் வரவை எதிர்பார்த்துக் காலியாகவே வைத்திருப்பதோடு, இந்த உத்தியோகத்தையும் நான் வந்தவுடன் வகிக்க அனுமதி கொடுப்பார்கள் ஆகையால், அதைப்பற்றி நான் அதிகமாய் விசனப்படப் போகிறதில்லை. என்னுடைய முக்கியமான கொள்கை பரோபகாரம் செய்வது. அதை நான் இந்த உத்தியோகம் இல்லாமல் போனாலும் என்னால் இயன்ற அளவில் செய்தே தீருவேன். என் சம்சாரம் குத்தாலத்தில் இருப்பதைவிட, உங்கள் ஜாகையில் இருப்பதையே சிலாக்கியமாக மதிக்கிறேன். ஆனாலும், எதிராளிகள் சந்தேகங் கொள்ள இடம் கொடாமல் நாம் செய்வதை எல்லாம் திருந்தச் செய்ய வேண்டும். அதை உத்தேசித்தே, நான் அவளை அவளுடைய தாயார் வீட்டுக்கு அனுப்பிவிடப் போகிறேன். அவள் கொஞ்ச காலம் அங்கே இருந்து என்னை நினைத்து அழுது கொண்டிருக்கட்டும்.

கண்ணப்பா:- அவர்களுக்குத்தான் நிரம்பவும் கஷ்டமான வேலை. வந்து கேட்கும் ஜனங்கள் எல்லோரும் நம்பும்படியாக துக்கங் கொண்டாடி அழுது பாசாங்கு செய்வதென்றால், அது சுலபமான காரியமா?

சாமியார்:- அதற்கு ஏதாவது தந்திரம் செய்யலாம். நான் இறந்து போன பிறகு, அவள் அந்த துக்கத்தைத் தாங்க மாட்டாமல், கடுமையான நோய் கொண்டு படுத்திருப்பதாகவும், எவரும் அவளிடம் வந்து தொந்திரவு கொடுக்கக் கூடாதென்று வைத்தியர்கள் கண்டித்துச் சொல்லி இருப்பதாகவும் அவளுடைய தமயனும், தாயாரும் சொல்லிக் கொண்டிருந்தால், எவரும்