பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

151

செய்யும் எண்ணத்தோடு அவன்தான் ஏதோ சூது செய்திருக்கிறான்" என்றாள்.

உடனே கண்ணப்பா, “நம்முடைய சாமியார் ஐயா சொன்னது நிஜமாய்விட்டதே. எதிரிகள் நம்மேல் கத்தி தீட்டிக் கொண்டிருப்பதாகவும், நாம் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார் அல்லவா. அவன் தன்னுடைய பாணத்தை சென்னப் பட்டணத்தில் பிரயோகம் செய்திருக்கிறான் போலிருக்கிறதே! இனிமேல் நம்முடைய முறை போலிருக்கிறது. நமக்கு எவ்விதமான துன்பம் இழைக்க அவன் ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறானோ தெரியவில்லை” என்றான்.

அப்போது வடிவாம்பாள் மிருதுவான குரலில் தனது மாமியாரைப் பார்த்து, “இவ்வளவு பெருத்த விபரீதம் நடந்திருக்கையில், பட்டணத்து சம்பந்தி வீட்டார் இதைப்பற்றி நமக்கு எழுதாமல் இருக்கமாட்டார்கள். அன்றைக்கு மறுநாள் ஞாயிற்றுக்கிழமை ஆகையால், தபால் தலை அகப்படாமையால், கடிதம் எழுதக்கூடாமல் போயிருக்கும். அல்லது சரியான தகவல்களைத் தெரிந்து கொண்டு எழுத அவகாசம் கிடைத்திருக்காது. ஒரு வேளை நேற்று எழுதிப் போட்டிருக்கலாம். நமக்கு வந்திருக்கும் கடிதங்களில், அவர்களுடைய கடிதம் ஏதாவது இருக்கிறதா என்று பார்க்கச் சொல்லுங்கள்” என்று தணிவான குரலில் கூறினாள்.

திரிபுரசுந்தரியம்மாள் அதை உடனே தனது புருஷருக்குத் தெரிவிக்க, அவர், “ஆம், வாஸ்தவம்தான். அவரிடம் இருந்து கடிதம் வந்திருக்கலாம்” என்று கூறிக்கொண்டே, மிகுதி இருந்த கடிதங்களை எல்லாம் எடுத்து ஆராய்ந்து பார்க்க, பெருத்த உறையால் மூடப்பட்டிருந்த ஒரு கடிதம் சென்னையில் இருந்து வந்திருந்ததைக் கண்டு, நிரம்பவும் பரபரப்பாக அதை எடுத்து வாயைத் திறந்து, உள்ளே இருந்த காகித மடிப்பை வெளியில் இழுத்தார். அதற்குள் தபால் கார்டு அளவில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் வேறொரு காகிதத்தால் மூடிப் பொட்டலமாக மடித்து