பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

153

முற்றிலும் துர்ப்பலமான நிலைமையில் ஆஸ்பத்திரியில் திடக்கிறான். ஆனாலும், அநேகமாய் பிழைத்துக் கொள்ளலாம் என்று டாக்டர்கள் அபிப்பிராயப்படுகிறார்கள். பேசுவதற்கு அவனுக்குச் சக்தி ஏற்பட்டவுடனே போலீசார் அவனைக் கொண்டே எதிரிகளின் சதி ஆலோசனை இன்னதென்று திட்டமாக அறிந்துவிடுவது நிச்சயம். அப்படி ஆஸ்பத்திரியில் கிடப்பவன் இன்னான் என்று அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவல் என் மனதில் உண்டானதோடு, சனிக்கிழமை மத்தியானத்தில் இருந்து என் பங்களாவில் நடந்த சம்பவங்களை எல்லாம் தெரிவிக்க வேண்டும் என்ற எண்ணமும் உண்டானது. ஆகையால், நான் ஞாயிற்றுக்கிழமை மாலையில் கோமளேசுவரன் பேட்டையில் உள்ள நம்முடைய சிரஞ்சீவி கந்தசாமியின் ஜாகைக்குப் போனேன். தம்பி வீட்டில் இல்லை. வேலைக்காரி மாத்திரம் இருந்தாள். சனிக்கிழமை காலையில், அவர் புறப்பட்டு எங்கேயோ வெளியில் போனார் என்றும், அதன் பிறகு திரும்பி ஜாகைக்கே வரவில்லை என்றும், தான் ஒவ்வொரு வேளையிலும் ஆகாரம் தயாரித்து வைத்து அவருடைய வருகையை ஆவலோடு எதிர்பார்த்துத் தவித்துக் கொண்டிருப்பதாகவும் அவள் சொன்னாள். அதைக் கேட்டவுடன் எனக்குப் பெருத்த திகில் உண்டாகிவிட்டது. நம்முடைய எதிரிகள் சனிக்கிழமை பட்டணத்தில் இருந்தார்கள் என்பது பிரத்தியrமாதலால், அவர்கள் சிரஞ்சீவி தம்பிக்கும் ஏதாவது கெடுதல் செய்திருப்பார்களோ என்ற சந்தேகமும் திகிலும் என் மனதில் உண்டாயின. நான் உடனே போய் போலீசாரிடம் அந்த விஷயத்தை அறிவித்த பின், அவர்களோடு நான் புறப்பட்டு, அவர் போயிருக்கக்கூடிய இடங்களில் எல்லாம் போய்த் தேடிப் பார்த்தேன். எந்த இடத்திலும் அவர் காணப்படவில்லை. அவர் எங்கேயாவது பக்கத்து ஊர்களுக்கு நண்பர்களோடு தமாஷாய்ப் போய் இருந்துவிட்டுத் திரும்பி வந்துவிடலாம் என்றும், அரை குறையான சங்கதியைத் தெரிந்து நான் உங்களுக்கு உடனே எழுதினால், நீங்கள் எல்லோரும்