பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

159

என்று அவர்கள் எல்லோரும் ஆவலாகக் காத்திருந்தார்கள். அன்று முழுதும் தந்தியே வராமையால் எல்லோரும் பெருத்த ஏமாற்றமும் கலக்கமும் அடைந்து நெருப்பின் மீது வீழ்ந்த புழுக்கள் போலத் துடித்துக் கொண்டிருந்தனர்.

மறுநாளாகிய ஞாயிற்றுக்கிழமை தினம் வந்தது. அன்றைய தினம் எப்படியும் கடிதமாவது தந்தியாவது வரும் என்று நடராஜ பிள்ளை, சுந்தரம் பிள்ளை, விருந்தினர் முதலிய எல்லோரும் எதிர்பார்த்தனர். தபாற்காரன் சமாசாரப் பத்திரிகைகளை மாத்திரம் கொடுத்தானே அன்றி, கடிதம் எதையும் கொடுக்கவில்லை. விருந்தினருள் ஒருவர் சமாசாரப் பத்திரிகைகளைப் பிரித்து பொழுதுபோக்காகப் பக்கங்களை மேன்போக்காகத் தள்ளிக் கொண்டே வந்தார். அவர் திடீரென்று எதையோ கண்டு திடுக்கிட்டுக் கூக்குரலிட்டு, “ஐயோ! இதென்ன பெருத்த இடியாக இருக்கிறதே! நம்முடைய வேலாயுதம் பிள்ளை முதலியோருக்கு பயங்கரமான அவகேடு நேர்ந்துவிட்டதாமே” என்றார்.

அதைக் கேட்ட மற்ற எல்லோரும் திகில் கொண்டு நடுநடுங்கி அந்தச் செய்தியைப் படிக்கச் சொல்ல, முன் குறிக்கப்பட்ட விருந்தாளி அடியில் வருமாறு சமாசாரப் பத்திரிகையில் படிக்கலானார்:-

சென்னையில் பெரிய கலெக்டர் உத்தியோகம் பார்த்து வரும் ம-ா-ா-ஶ்ரீ பட்டாபிராம பிள்ளை அவர்களுடைய பெண்ணுக்கு வெள்ளிக்கிழமை அன்று நிச்சயதார்த்தம் நடத்தினார்களோ, அல்லது, நடத்த உத்தேசித்து இருந்தார்களோ தெரியவில்லை. மன்னார்குடியில் உள்ள பெருத்த மிராசுதார் ஒருவருடைய பிள்ளைக்குத் தம் பெண்ணைக் கொடுக்க கலெக்டர் நிச்சயித்திருந்தாராம். பிள்ளை வீட்டார் கோமளேசுவரன் பேட்டையில் உள்ள ஒரு பெருத்த மெத்தை வீட்டில் இறங்கி இருந்தார்களாம். இரவில் அவர்கள் படுத்துத் தூங்கின சமயத்தில் யாரோ பகைவர்கள் உள்ளே நுழைந்து மகா பயங்கரமான பெருத்த அட்டுழியம் செய்துவிட்டுப் போய்விட்டார்களாம். இன்று காலையில் போலீஸ் ஸ்டேஷனில் சுமார் ஆயிரம் ஜனங்கள் கும்பலாகக் கூடி இருந்தார்கள். நான் உள்ளே நுழைந்து