பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

165

விஷயத்தில் தமது மனதைச் சலிக்கவிடாமல் ஒழுங்காக நடக்கின்றனர். தளர்வடைந்த பலஹீனர்களும், நோயாளிகளும், கிழவர்களும் பரஸ்திரீ கமனத்தில் நாட்டமுடையவர்களாக இருப்பதை நாம் ஆங்காங்கு காண்கிறோம். மனிதர் இப்படிப் பலவாறாக ஒழுகுவதற்கு அவர்களது தேகக்கூற்றைவிட மனப்பான்மையே முக்கியமான காரணமாக அமைந்திருக்கிற தென்றே நாம் துணிந்து கூறலாம். மனிதரது மனப்போக்கு, அவரது பூர்வஜென்ம வாசனை நிறைந்ததாய் அமைந்துள்ள தென்பது எல்லோரும் அறிந்த விஷயமாதலால், மனிதன் சுத்தனாய் இருப்பதும் சபல புத்தியுடையவனாய் இருப்பதும், அவன் எடுத்த பல ஜென்மங்களில் அவனது மனம் எவ்வித நாட்டத்தைக் கொண்டு எவ்வித துறையில் பழகி முதிர்ச்சியடைந்திருக்கிறதோ, அதைப் பொறுத்ததாகவே இருக்கின்றது.

ஆகவே, நமது மாசிலாமணி உண்மையான யோக்கியதைகள் நிறைந்த நிஜவஸ்துவிருக்க, அதைவிட்டு, போலி வஸ்துவின் மீது பிரமைகொண்டது ஓர் அதிசயமன்று. ஆதி காலத்திலிருந்தே சட்டை நாத பிள்ளையும், அவரது சகோதரனான மாசிலாமணியும் அதே மனப்பான்மையுடையவர்களாக இருந்தது எல்லோருமே அறிந்த விஷயம். மாசிலாமணி வடி வாம்பாளென்கிற நமது பெண்ணரசியை மணக்க வேண்டுமென்று பேரவாக் கொண்டிருந்த சமயத்திலும், அஞ்சலை என்ற வயதான ஸ்திரீயிடம் நட்பாயிருந்தது முன்னரே கூறப்பட்ட விஷயம். வடிவாம்பாள் தனக்கு இல்லாமல் போன ஏமாற்ற நிலைமையில், அவன் சிறைச்சாலையில் ஸ்திரிகளின் முகத்தையே பாராமல் இருக்க நேர்ந்தமையால், அந்தக் காலத்தில் அவனது மனப்பேய் அக்ஷயமாய்ப் பெருகி அவனது தலைக்கேறியிருந்தது. அவனது சிறைவாசம் முடிந்த பின்னர், அவன் அபாரமான செல்வத்திற்கு அதிபதியாய் அடக்குவாரின்றித் தனிமையில் இருக்க நேர்ந்தமையால்; முன்னர்க் கூறப்பட்டபடி அவனுக்கு ரமாமணியின் தொடர்பு சுலபத்தில் ஏற்பட்டது. அவள் அவனது மனதை மயக்கி, அறிவைக் கலக்கி, அவனது வாஞ்சை எப்போதும் மாறாமல் தன் மீது இருக்க வேண்டு மென்ற கருத்தோடு தன்னாலான ஸாகஸங்களையும் தளுக்கு