பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

166

மாயா விநோதப் பரதேசி

குலுக்குகளையும் காட்டி வந்தாளானாலும், அவனது மனம் ஒரு நிலையில் நிற்காமல் பலர் மீதும் சென்று கொண் டிருந்தது. ஆயினும், அவன் போலீசாரது பார்வையில் இருக்க நேர்ந்தமையால், தான் அதிகமாய் வெளியிற் சென்று பல இடங்களிலும் சிநேகம் வைத்துக் கொண்டிருந்தால், தான் போலீசாரது தொந்தரவிற்கு இலக்காக நேருமென்ற நினைவினால் அஞ்சி, அவன் அரும்பாடுபட்டுத் தனது மனத்தை அடக்கிக் கொண்டிருந்தான். சென்னையிலிருந்து இடும்பன் சேர்வைகாரனால் அபகரித்து வரப்பட்ட பெண் ரமாமணியைவிடப் பன் மடங்கு அதிக அழகுடையவளென்பதை அவன் வேலைக்காரிகளின் மூலமாய் உணர்ந்ததன்றி, கலியான காலத்தில் நேரில் கண்டு, அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டானாதலால், அத்தகைய அபார அழகு வாய்ந்த பெண்மணியிடம் எவ்விதமான புதிய இன்பம் இருக்குமோ என்ற மனப்பிரமை அவனை முற்றிலும் பித்தனாக்கிக் கொண்டிருந்தது. அதுவுமன்றி, தங்களது ஜென்ம விரோதியான பட்டாபிராம பிள்ளையின் விஷயத்தில் தான் பழிக்குப்பழி வாங்க அதுவே நல்ல காரியமென்று அவன் நினைத்தானாகையால், அந்த இன்பகரமான எண்ணம், அந்தப் பெண்ணிடம் அவன் அடைய எதிர்பார்த்த சுகத்தைப் பன்மடங்கு பெருக்கிக் காட்டியது. ஆகவே, அவன் மனோன்மணியம்மாளிடம் தான் சோபனக் கலியானம் நிறைவேற்றுவதைத் தான் தேவேந்திர பதவியை அடைவதைக் காட்டிலும் சிரேஷ்ட மானதாகவும், அதிக இன்பகரமானதாகவும் அவன் மதித்து அதற்காக அவன் ரமாமணிக்குத் தெரியாமல் பெருத்த பெருத்த ஏற்பாடுகளையெல்லாம் ரகசியத்தில் செய்து கொண்டிருந்தான். அந்த நிலைமையில் இடும்பன் சேர்வைகாரன் சென்னையிலிருந்து செவ்வாய்க்கிழமை அன்று வந்த சமாசாரப் பத்திரிகையைக் காட்டி, தான் சென்னையிலிருந்து அபகரித்து வந்தது மனோன்மணியல்ல என்பதைத் தெரிவிக்கவே, அதை உணர்ந்த மாசிலாமணியின் மனப்பிரமையும் ஆவலும் முன்னிலும் பன்மடங்கு அதிகரித்தன. இன்னாள் என்ற தகவலே தெரியாத ஒர் அழகான யெளவன ஸ்திரீ தன்னை மணந்து கொண்டதையும், தான் ஏற்படுத்திய சோபன முகூர்த்தத்திற்கு இசைந்திருப்பதையும் எண்ண எண்ண,