பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

169

வானதும் அன்னப்பட்சிகளின் இறகுகளிற்குள் புகையிலும் அதிக நுட்பமாகக் காணப்படுவதுமான பூ மயிர்களே பஞ்சாகக் கொண்டு வெல் வெட்டினால் போர்த்தப் பெற்ற மெத்தை, திண்டுகள், தலையணைகள் நிறைந்திருந்தன. சுவர்கள் முழுவதும் நிலைக்கண்ணாடிகளும் படங்களுமே மயமாக அடர்ந்திருந்தன. புஷ்பத்தொட்டிகளின் பந்திக்கு இடையிடையில் இருந்த இடைவெளிகளில் தரை முழுதும் காலை வைத்ததால் அந்த சுகத்தினால் உடனே தூக்கம் உண்டாகத்தக்க வழுவழுப்பான வெல்வெட்டுகள் போர்த்தப்பெற்ற ரஜாய் மெத்தைகளே நடை பாவாடையாக விரிக்கப்பெற்றிருந்ததன்றி, ஆங்காங்கு சதிபதிகள் பலவித சந்தர்ப்பங்களில் பலவாறாக இருப்பதற்குத் தக்கபடி சொகுஸான ஸோபாக்கள் காணப்பட்டன.

இவ்விதமாக அமைக்கப்பட்டிருந்த நமது மாசிலாமணியின் சயனமாளிகை செவ்வாய்க்கிழமையன்று மற்ற நாட்களைவிடப் பதினாயிர மடங்கு விசேஷமாக அலங்கரிக்கப்பட்டுப் புத்துயிர் பெற்று அமோகமாக விளங்கியது. அந்த மாளிகைக்குள் கோடிக் கணக்கில் பொருத்தப் பெற்றிருந்த மின்சார மணி விளக்குகளும், வால்ஷேட் குளோப்புகளும், ஸ்படிக ஸரவிளக்குகளும் கொளுத்தப்பட்டு, வானவில்லில் காணப்படுவது போன்ற அற்புதமான பல நிறங்களில் அத்யாச்சரியகரமான ஜோதிமயமாக விளங்கின. அதற்கு முன்பே இரண்டு மூன்று பீப்பாய்களில் வந்த புதிய பன்னீரில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, சந்தனம் முதலிய பரிமளகந்தங்களைக் கரைத்து அந்த மாளிகையின் சுவர்கள், தரை முதலிய சகலமான இடங்களும் அலம்பிச் சுத்தி செய்யப்பட்டன. அங்கு நிறைந்திருந்த பூச்செடிகளுக்கு எல்லாம் அன்றையதினம் தண்ணீருக்குப் பதிலாக பன்னீரே வார்க்கப்பட்டது. அந்த சயனகிரகத்தில் நான்கு மூலைகளிலும் நடுமத்தியிலும் ஐந்து அழகான பெண் சிலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அந்த ஐந்து சிலைகள் வெறுந்தகடுகளினால் அமைக்கப்பட்டிருந்தமையால், அவற்றின் உள்பக்கம் முழுதும் காலியாக இருந்தன. ஜவ்வாது, புனுகு, அம்பர், அரகஜா முதலிய விலையுயர்ந்த பரிமள கந்தங்கள் ஐந்து விதமான வாசனையுள்ள ஐந்து தினுசு அத்தர்களில் கரைத்து மேற்படி ஐந்து சிலைகளின் உட்புறங்களிலும்