பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

175

னுக்குத் தெரியவில்லையே! இவனுடைய நிலைமை எவ்வளவு பரிதாபகரமானது. நிஜமான ஒரு ஸ்திரீ இவனுடைய சயன அறையில் வந்து இவனுக்கு மனைவியாக இருந்தால் கூட இவனுக்கு மனத்திருப்தியும் உண்மையான ஆநந்தமும் உண்டாகப் போகிறதில்லையே. இவனைப் போலவே இருக்கும் ஆண் பிள்ளையாகிய என்னை இவன் பெண்பிள்ளை என்று மதித்து மனக்கோட்டை கட்டி என்னிடம் சுகம் அநுபவிக்க ஆவல் கொண்டு துடிதுடித்திருக்கிறானே! என்ன இவனுடைய துரதிஷ்டம் பணத்தை லக்ஷக்கணக்கில் வாரி இறைத்து மகாபிரமாதமான இத்தனை ஏற்பாடுகளையும் செய்துள்ள இவன் கடைசியில் ஏமாறப் போகிறானே அப்போது இவனுடைய மனம் எப்படிப்பட்ட சங்கடமடையுமோ தெரியவில்லையே! பேராசை பெரு நஷ்டமென்று, அபாரமான ஆசைகொண்டு ஆகாயத்தில் பறக்கிறவர்களுடைய கதியெலாம் இப்படித்தான் தாங்கமுடியாத பரமவேதனையில் போய் முடியும். இருக்கட்டும். நான் இவனுடைய பிரியப்படியே அலங்காரம் செய்து கொண்டு படுக்கையறைக்குப் போய்ச் சேருகிறேன். என்னிடம் வந்து இவன் என்ன செய்கிறானென்று தான் பார்க்கிறேன்.” என்று தீர்மானித்துக் கொண்டவனாய் மாலை வரையில் கட்டிலில் சாய்ந்து ஒய்வடைந்து இருந்துவிட்டு எழுந்து தனது உடைகளை எல்லாம் விலக்கிவிட்டு வேலைக்காரியால் நிரப்பப்பட்டிருந்த பன்னி நிறைந்த தொட்டியில் இறங்கி நீராடி உடம்பைத் துடைத்துக் கொண்டு மாசிலாமணியால் அனுப்பப்பட்டிருந்த ஆடையை ஆபரணங்களை எல்லாம் எடுத்து அணிந்து கொள்ளத் தொடங்கினான். நமது கந்தசாமி சுத்த வீரத்தன்மை பூர்த்தியாக நிறைந்த ஆண் பிள்ளையாகப் பிறந்திருந்தும், அவனது தேகவனப்பைப் போலவும், முகத்தின் வசீகரத் தன்மையைப் போலவும், மகா அற்புதமான அழகு வாய்ந்த ஒருயெளவன ஸ்திரீக்குக் கூட அமைவது அரிதென்ற விஷயம் முன்னரே கூறப்பட்டதல்லவா. அதனாலேயே அவன் படித்த கலா சாலையில் நாடகம் நடிக்கப்பட்ட காலங்களிலெல்லாம், எந்த நாடகத்திலும் கதாநாயகி வேஷத்திற்கு அவனே பொறுக்கி எடுக்கப்பட்டதன்றி, அழகிலும், நடிப்பிலும், தனக்கு எவருமே