பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

மாயா விநோதப் பரதேசி

நிகரில்லை என்ற அபாரமான கீர்த்தியையும் அவன் அடைந்திருந்தான். அவனுக்கு வயது சுமார் இருபது ஆகி இருந்ததானாலும், அப்போது அவனது முகத்தில் மீசை முளைக்காதிருந்தமையால், ஸ்திரீகளின் முகத்தைப் போல அவனது முகம் மிருதுவாகவும், வழவழப்பாகவும், தளதளப்பாகவும் இருந்தது. ஆகவே ரோஜாப் புஷ்பத்தின் சென்னிறத்தை உள்புறம் அடிக்கடி தோற்றுவித்த தந்தத்தகடு போல அமைந்திருந்த அவனது முகம் வாசனை கலந்த பன்னீரினாலும் சந்தன ஸோப்பினாலும் சுத்தமாக அலம்பப்படவே, அது அப்போதே மலரும் தாமரைப்புஷ்பம் போல புதுத்தன்மையும் அழகும் வசீகரத்தன்மையும் வடி வெடுத்தது போலத் தோன்றியது. இயற்கையிலேயே கன்னங்கரே லென்று அமைந்திருந்த அவனது கண்களும், புருவவிற்களும், முகத்தின் துல்லியமான நிறத்தினால் பன்மடங்கு அதிக வசீகரமாய்த் தோன்றின. அழகிற்கு அழகு செய்வது போல, அவன் தனது கண் இமைகளில் மைதீட்டி, புருவவிற்களில் ஜவ்வாது அணிந்து, நெற்றியில், செஞ்சாந்துத் திலகமிட்டிருந்தது கண் கொள்ளா வைபவமாக விளங்கினதன்றி பெண்தெய்வங்களான பார்வதி, ஸரஸ்வதி, லக்ஷ்மி முதலியோரது அழகும், முக வசீகரமும் இப்படித்தான் இருக்குமோ என்ற சந்தேகத்தையும் உண்டாக்கின. அவனது இடுப்பில், ரோஜா நிறமுள்ள முழு வெல் வெட்டினாலான பாவாடை காணப்பட்டது. அந்தப் பாவாடையின் கீழ்பாகத்தில் இருந்த ஓரத்தில் அழகான கொடியில் புஷ்பங்கள் மலர்ந்திருப்பது போல தகத்தகாயமான தங்க ஜரிகையினால் நெய்யப்பட்ட மகா வசீகரமான கரை அமைக்கப்பட்டிருந்தது அன்றி, பாவாடையின் உடலில், ஏழுவகை நிறங்களில் தூரதூரமாய் ஜரிகைப் புட்டாக்கள் நெய்யப்பட்டிருந்தன. அந்தப் பாவாடை, சமப்பருமனில் மடிப்பு மடிப்பாகச் சுருண்டு அவனது தேகத்தின் அடிப்பாகத்தை மூடி நிறைந்து அந்த பாகத்தின் அழகைப் பதினாயிரமடங்கு பெருக்கிக் காட்டிக் கொண்டிருந்தது. பாவாடையின் கரைகள் முடியும் இடத்தில் சுவர்ணத்தினாலானவைபோலத் தோன்றிய அவனது மிருதுவான பாதங்களில் பாதசரம், பட்டை கொலுசு, மிஞ்சி, பீலி முதலிய ஆபரணங்கள் நிறைந்து, அவை தத்ரூபம் பெண்ணின் இன்பமயமான