பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

177

பாதங்கள் போலவே காண்போரது மனதை பிரமிக்கச் செய்தன. அவனது மார்பு, புஜம், அடிக்கைகள் முதலிய ஸ்தானங்களை மறைத்திருந்த இரவிக்கையும் பாவாடையைப் போலவே ஜரிகைக்கரைகளும் புட்டாக்களும் நிறைந்த விலை மதிப்பற்ற வெல் வெட்டினால் ஆக்கப் பட்டிருந்தனவானாலும், பாவாடையின் ரோஜா நிறத்தின் முன் அதிக வசீகரமாகவும் எடுப்பாகவும் இருக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு, இரவிக்கை பச்சைப் பசேலென்ற பசுமைநிறமுடையதாக இருந்தது. அவன் ஏற்கெனவே உபயோகித்து வந்திருந்த இரண்டு துணிப்பந்துகளின் உதவியினால், அவன் தனது மார்பிற்குப் பெண் தோற்றத்தை உண்டாக்கிக் கொண்டான். வெவ்வேறாகத் தோன்றிய பாவாடை, இரவிக்கை ஆகிய இரண்டையும் ஒன்று செய்து, தனது உடம்பைப் பெரிதுபடுத்தி ஒரு ரூபமாய்க் காட்டுவதற்காக, அவன் புதுமையான ஒரு தாவணியைத் தனது பாவாடையின் மேல் பாகத்தில் ஒரு சுற்றுச் சுற்றி அதை மேலாக்குப் போட்டு கழுத்தை வளைத்துக் கொணர்ந்து வலதுபக்கத்தில் தொங்கவிட்டிருந்தான். அந்தத் தாவணி பத்தரைமாற்றுத் தங்கத்தை உருக்கிவார்த்த பாளம் போல பளபளவென்று ஒரே ஜோதிமயமாக இருந்ததானாலும், அது ஒரு நிமிஷம் ஊதா நிறத்தையும், இன்னொரு நிமிஷம் பவுன் நிறத்தையும் மாறி மாறிக் காட்டி மனதை பிரமிக்கச் செய்து கொண்டிருந்ததன்றி, அது புகையினாலானதோ, அல்லது காற்றினாலானதோ, அது இருப்பது பொய்யோ மெய்யோ என்ற சந்தேகத்தை உண்டாக்கத்தக்கதாய் அவ்வளவு மெல்லியதாய் நெய்யப்பட்டிருந்தது. அவன் தனது அபாரமான கருத்த அளகபாரத்தை மினுமினுப்பாக வாரிப் பின்னி விசாலமான ஜடைப் பின்னல் போட்டுப் பின் பக்கத்தில் கணைக்கால் வரையில் தொங்கவிட்டிருந்தான். ஜடைப்பின்னலின் நுனியில் காணப்பட்ட சிவப்பு நாடாவும், இடையிடையில் நட்சத்திரச்சுடர்கள் போலக் காணப்பட்ட வைர ஜடைபில்லைகளும், சிரசின் பின்புறத்தில் காணப்பட்ட சிறிய நவரத்ன இராக்கடியும், அதைச் சுற்றிலும் மிதமாகச் சூட்டப்பட்டிருந்த ரோஜாப்புஷ்பமும் ஜாதிமல்லிகைப் புஷ்பமும் ஒன்றுகூடி, அவனது பின்னழகைக் காண்போர்

மா.வி.ப.II-12