பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

181

டுமல்லவா. நீங்கள் இப்போது வேறே எதையும் சாப்பிடாமல் இருப்பதே நல்லது" என்றாள்.

கந்தசாமி புன்னகை செய்து நாணிக் குனிந்தவண்ணம், "சரி, நான் சாப்பிடுவதிருக்கட்டும். நீ அந்த அறையின் அழகை வர்ணித்ததைக் கேட்டது முதல் அதற்குள்ளிருக்கும் வேடிக்கைகளை எல்லாம் பார்க்க வேண்டுமென்ற ஆசை என்னைத் தூண்டுகிறது. நாம் ஏழே முக்கால் மணிக்கு அங்கே போனால், கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் எஜமானர் வந்துவிடுவார். அதற்குப் பிறகு, நான் அங்கே இருக்கும் வேடிக்கைகளைப் பார்த்துக் கொண்டிருக்க, எனக்கு அவகாசம் கிடைக்காது. ஆகையால், நாம் இப்போதே அங்கே போய்விட்டால், அவர் வருவதற்குள் எல்லாவற்றையும் சுற்றிப் பார்த்து விடலாம்" என்றாள்.

அதைக் கேட்ட வேலைக்காரி சந்தோஷமான முகத்தோற்றத் தோடு பேசத் தொடங்கி, "சரி, போவோம் வாருங்கள். அதுவும் நல்ல யோசனைதான்" என்று மறுமொழி கூறினாள். உடனே கந்த சாமி கட்டிலை விட்டுக் கீழே இறங்கி தத்ரூபம் பெண்ணைப் போல் அன்ன நடையும் அழகு நடையுமாக நடக்கத் தொடங்கினான். அவனது கால்களிலிருந்த பாதலரம் கலீர்கலிரென்ற இன்னொலியெழுப்பி சங்கீதம் பாடத் தொடங்கியது. மெட்டிகள் டக் டிக் என்று தாளம் போடவாரம் பித்தன. சுருண்டு சுருண்டு தொங்கிய வழுவழுப்பான புதிய வெல்வெட்டுப் பாவாடை தேர் போல அசைந்தாட, அதன் மேல் தாவணி உராய்ந்து ஸரஸ்ர வென்று ஒசைசெய்ய, தோகை விரித்தாடும் சோலை மயில் போல, நமது போலி மணப்பெண் நாணிக் குனிந்து நடக்க, வேலைக்காரி அவளை நடாத்தி அழைத்துக் கொண்டு போய் இரண்டு மூன்று விடுதிகளுக்கப்பால் இருந்த சோபன அறையை அடைந்து தாளை நீக்கிக் கதவைத் திறந்து அதற்குள் கந்தசாமியை அனுப்பிவிட்டு தான் போவதாகக் கூறிவிட்டு மறுபடியும் கதவை மூடிக்கொண்டு போய்விட்டாள்.

ஒரே ஜோதிமயமாகவும், விநோதக் களஞ்சியமாகவும் காணப்பட்ட சோபன அறைக்குள் நுழைந்த கந்தசாமி, நாற்புறங்களிலும் திரும்பித் திரும்பிப் பார்த்து பிரமித்து சிறிதுநேரம் அப்படியே