பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

187

என்னை நீ இனி உன்னுடைய அடிமைபோலவே எண்ணிக் கொள்ளலாம். நீ காலாலிடும் வேலையை நான் தலையால் செய்யக் காத்திருக்கிறேன். இனி நீயே என்னுடைய எஜமானி: என்னுடைய அபாரமான சம்பத்து முழுதிற்கும் இனி நீயே உரியவள். என்னுடைய உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் நான் இந்த நிமிஷம் முதல் உனக்கே கொடுத்துவிட்டேன். உன் முகத்தைப் பார்த்த முதல் அந்த முகத்திலிருக்கும் ஏதோ ஒர் அற்புதமான சக்தி என் மனசைக் காந்தம் போல இழுத்து என்னை உனக்கு அடிமையாக்கி விட்டது. நான் இது வரையில் எத்தனையோ ஸ்திரீகளைப் பார்த்திருக்கிறேன். எவளிடத்திலும் இப்படிப்பட்ட அபூர்வமான முகக் களையை நான் கண்டதே இல்லை. உன் முகத்தில் அவ்வளவு அதிகமாக லக்ஷ்மி விலாசம் ஜ்வலிக்கிறது. உபயோகமற்ற பல ஸ்திரீகளிடத்தில் என் புத்தி சென்று சபலித்தலைகிறதே என்று நினைத்து என்னை ஒழுங்கான நெறிக்குக் கொண்டு வரவேண்டுமென்ற கருத்தோடு கடவுள் இப்படிப்பட்ட தெய்வீகமான முகவிலாஸம் பொருந்திய உன்னைப் பொறுக்கி எனக்கு மனைவியாக அனுப்பி இருக்கிறாரென்றே நினைக்கிறேன். வா இப்படி, கண்ணே! நேரமாகிறது. சரியாக எட்டு மணிக்கு முகூர்த்த காலம் வருகிறதென்று புரோகிதர் சொல்லி இருக்கிறார். இது நம்முடைய ஆயிசு காலம் முழுதையும் பாதிக்கக்கூடிய மகா புனிதமான காரியம். நல்ல காலம் தவறும்படி நாம் விட்டுவிடக் கூடாது; என்ன ஆச்சரியம்! என் மனசை விட்டு நான் இவ்வளவு தூரம் பேசியதைக் கேட்டும், நீ இன்னமும் வெட்கப்படுகிறாயே! கண்ணே! கண்மணியே! ஏழரை மணிக்கே நீ இங்கே வந்து விட்டாயென்று நான் வேலைக்காரியிடத்திலிருந்து தெரிந்து கொண்டேன். அது முதல் நீ நிற்கிறாய்போல் இருக்கிறதே. வெகு நேரமாய் நிற்பதனால் உன்னுடைய உடம்பு தள்ளாடிக் தவிக்கிறது நன்றாய்த் தெரிகிறது. கால் கடுக்க நீ நிற்பதைப் பார்க்கப் பார்க்க, என் மனசிற்குக் கொஞ்சமும் தாளவில்லை. உன் உடம்புதவித்துக் தடுமாறுவதைப் பார்க்க, என் உயிரே துடிக்கிறது. நின்றது போதும், வா இப்படி என் தங்கமே! ஏன் இப்படி மெளனம் சாதித்து என்னை உயிரோடு கொல்லுகிறாய்! நீ இம்மாதிரி மர்மம் பாராட்டி நிற்கும் ஒவ்வொரு நொடிப்பொழுதும்