பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

17

7-வது அதிகாரம்

அவசரக் கலியாணம் - அபூர்வ மணப்பெண்

மது கந்தசாமி தனக்கு மனையாட்டியாக வரிக்கப்பட்டிருந்த மனோன்மணியம்மாளினது குணாதிசயங்களை நேரில் கண்டு அறியும் பொருட்டு பெண் வேஷந் தரித்து அவளது பங்களாவிற்குச் சென்றது சனிக்கிழமை தினம் என்பது முன்னரே சொல்லப்பட்டிருக்கிறது. அதற்கு முந்திய நாளாகிய வெள்ளிக் கிழமை காலையிலேதான் இடும்பன் சேர்வைகாரன் போலீஸ் உடை தரித்து நாகப்பாம்புகள் வைத்த பெட்டியையும் பொய்க் கடிதத்தையும் மன்னார்குடியில் திகம்பரசாமியாரது பங்களாவில் கொடுத்து விட்டு, உடனே கும்பகோணம் சென்று, அந்த வரலாற்றை மாசிலாமணியிடம் தெரிவித்து, அன்றைய தினமே மோட்டார் வண்டியிலும் ரயிலிலுமாகப் பல ஆள்களை சென்னைக்கு அனுப்பிவிட்டுத் தானும் அவர்களோடு வந்து சேர்ந்தான். ஆதலால், எல்லோரும் சனிக்கிழமை காலையில் சென்னையை அடைந்ததன்றி, அன்றைய தினம் இரவில் அவர்கள் பட்டாபிராம பிள்ளையினது பங்களாவிற்குள் புகுந்த காலத்தில் அவர்கள் கந்தசாமியை மனோன்மணி என்று ஆள்மாறாட்டமாக எண்ணவும் நேர்ந்தது. கந்தசாமி அன்றைய தினம் நடுப்பகல் முதல் மிகுந்த மன வேதனையினால் உலப்பப்பட்டிருந்து முடிவில் உண்டான அவமானத்தினாலும், விசனத்தினாலும் நிரம்பவும் குன்றி அயர்ந்து போய் இராப்போஜனமும் உண்ணாமல் தூக்கத்தில் ஆழ்ந்திருந்தவன் ஆதலால், இடும்பன் சேர்வைகாரன் முதலிய முரட்டு மனிதர்கள் வந்த காலத்தில் அவன் ஒருவாறு தனது உணர்வைப் பெற்றவனாய் இருந்தான். ஆனாலும், சரியான சுறுசுறுப்பும் ஊக்கமும் தெளிவும் அடைந்து உடனே எழுந்து உட்கார வல்லமையற்றவனாக இருந்தான். அதுவுமன்றி, அந்த முரட்டு மனிதர்கள் அவனிருந்த விடுதிக்குள் நுழைந்து அவனைக் கண்டு, அவன் தான் மனோன்மணியம்மாள் என்றும் கருதிய உடனே சிறிதும் தாமதம் இன்றி அவன் மீது பாய்ந்து இறுகப் பிடித்து மயக்க மருந்தை மூக்கில் பிடித்துவிட்டார்கள். ஆதலால், அவன்

மா.வி.ப.II-2