பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

188

மாயா விநோதப் பரதேசி

ஒவ்வொரு கொடிய தேள் கொட்டுவது போல அவ்வளவு வேதனையாக இருக்கிறது. என் கட்டிக் கரும்பே! என் கற்கண்டே! வா இப்படி, நேரமாகிறது" என்று அனலிடு மெழுகுபோல உருகிப் பணிவாகக் கூறினான்.

மாசிலாமணி கூறிய காதற் கனிமொழிகளைக் கேட்ட கந்தசாமி அப்புறம் திரும்பியபடி தனக்குள்ளாகவே நகைத்து, "மகா அயோக்கிய சிகாமணியாகிய இவன் உண்மைபோல எவ்வளவு உருக்கமாகவும் குழைவாகவும் பேசுகிறான் அறியாத பெண் எவளாவது வந்து இவனிடம் அகப்பட்டுக் கொண்டால், அவளைக் கொஞ்ச காலத்திற்குத் தன்னுடைய வலையில் சிக்க வைப்பதற்கு இவன் இப்படிப்பட்ட தந்திரமெல்லாம் செய்து, அவளை ஒரு நிமிஷத்தில் ஏமாற்றி விடுவானல்லவா. மற்ற பெண்பிள்ளை எவளுடைய முகத்திலும் இல்லாத ஆபூர்வமான லகஷ்மி விலாசம் என்னுடைய முகத்தில் இருக்கிறதாம். அதைக் காண, இவனு டைய கலியே நீங்கிவிட்டதாம். இனி நான் இவனுக்கு எஜமானி யாம். இவன் இனி என்னுடைய அடிமையாம். இவனுடைய உடல் பொருள் ஆவி ஆகிய மூன்றையும் எனக்கே அர்ப்பணம் செய்து விட்டானாம். பேஷ் பேஷ்! நன்றாக இருக்கிறது இவனுடைய சாகஸம். தமது கோரிக்கையும் மன ஆவலும் திருகிற வரையில் இவ்விதமான சொற்களை உபயோகிப்பது காமாதுரர்களின் இயல்டென்று நான் எத்தனையோ புஸ்தகங்களில் படித்த பழைய கதைதானே இது. இவன் சொல்லும் வார்த்தைகளை எல்லாம் தண்ணின் மேலே தான் எழுதிவைக்க வேண்டும். எட்டாவிட்டால் காலைப்பிடி, எட்டினால் குடுமியைப்பிடி என்று சுலோகம் சொல்லுவார்கள்; அதுபோல, இவனுடைய பிரியப்படி இணங்கி வருகிற வரையில், இவன் அடிமைதான். அதன் பிற கல்லவா இவனுடைய உண்மையான சுயரூபம் வெளிப்படும். இன்றைய இரவு முழுதும் இவன் இப்படித்தான் பிதற்றுவான். பொழுது விடிவதற்குள் இவனுடைய புத்தியும் வார்த்தைகளும் மாறிப்போய் விடும். நாளையதினம் இரவில் இவன் வேண்டா வெறுப்பாக இந்த அறைக்கு வருவான், அதற்கடுத்த நாள் இவனைக் கூப்பிடுவதற்கு சோபனப் பெண் ஒர் ஆளை அனுப்ப வேண்டும். அதற்கடுத்த நாள் இவன், "இதென்னடா சனியன்