பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

199

போலி மணப்பெண்:- தாங்கள் அப்படியெல்லாம் தப்பான வழியில் போகாத மனிதராயிருந்தால், அவர்களுக்குத் தெரியாமல் ஆள்களைவிட்டு மனோன்மணியம்மாளை அபகரித்துக்கொண்டு வரச் சொல்லியே இருக்கமாட்டீர்கள். அதிலிருந்தே தாங்கள் ஸ்திரீ விஷயத்திலும் வேறு எந்த விஷயத்திலும் வரம்புகடந்த எவ்விதச் செய்கைக்கும் ஒருப்படக் கூடியவர்களென்ற எண்ணம் என் மனசில் எப்படியோ உண்டாயிற்று. அது உண்மையென்பதை நீங்களே இப்போது ஒப்புக் கொண்டு விட்டீர்கள்.

மாசிலாமணி:- (மிகுந்த பிரமிப்படைந்து) நானே ஒப்புக் கொண்டேனா? நான்தான் நீ அப்படி நினைக்கலாமா என்று கேட்கிறேனே?

போலி மணப்பெண்:- கொஞ்ச நேரத்திற்கு முன் சொன்னதை இதற்குள் மறந்துவிட்டீர்களா? நானும், அதிக அழகாகவும் நற்குணங்கள் உடையவளாகவும் இருப்பதால், உடனே தாங்கள் தங்கள் மனசைத் தேற்றிக்கொண்டு, அவள்மேல் வைத்த ஆசையை என் மேல் மாற்றிவிட்டதாகச் சொன்னீர்கள். ஆனால், அதற்குத் தாங்கள் ஒரு சமாதானம் சொல்ல வருவீர்கள். ஆள் மாறாட்டம் ஏற்பட்டிருக்கிற தென்பதைத் தெரிந்து கொள்ளாமல், நான் கலியாணத்தை நடத்தி விட்டேனாகையால், நடந்து போனதை ஏற்கனவே எப்படி மாற்றுகிறதென்று சொன்னீர்களே. அதையே மறுபடியும் சொல்ல வருவீர்கள். ஆகையால், நான் அதைச் சொல்லாமல் விட்டுவிடுகிறேன். தாங்கள் கொஞ்ச நேரத்திற்குமுன், என் முக விலாஸத்தில் ஏதோ புதுமையான கவர்ச்சி இருப்பதாகச் சொன்ன காலத்தில், உபயோகமற்ற பல ஸ்திரீகளிடத்தில் தங்கள் புத்தி சென்று சபலித்தலைகிறதே என்று நினைத்து, தங்களை ஒழுங்கான நெறிக்குக் கொண்டுவர வேண்டுமென்ற கருத்தோடு கடவுள் என்னுடைய முகத்தில் ஏதோ சூட்சுமத்தை வைத்துப் படைத்து அனுப்பியிருப்பதாகச் சொன்னீர்களே, அதிலிருந்து என்ன அர்த்தமாகிறதென்று எண்ணிப் பாருங்கள். தங்கள் மனம் இதற்குமுன் பல ஸ்திரீகளிடத்தில் சபலித்து அலைந்ததென்று அர்த்தமாகவில்லையா? ஒருவேளை தாங்கள் இதற்குமுன் இரண்டு மூன்று பெண்களைக்