பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

204

மாயா விநோதப் பரதேசி

சொல்லிக் கொள்ளுகிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமோ தெரியாதோ! அந்த ஊரிலுள்ள பிச்சைக்காரர்கள் கூட லா பாயிண்ட் பேசிக் கொண்டேதான் பிச்சை கேட்பார்களாம். வீட்டுக்காரர்கள் அவர்களிடம் கூட நிரம்பவும் பயந்து, "ஐயா! தயவு செய்து போய்விட்டு வாருங்களைய்யா" என்று பணிவாகவும் வணக்கமாகவும் பேசவேண்டுமென்று நான் கேள்வியுற்றிருக்கிறேன். ஏனென்றால் அது இங்கிலீஷ்காரன், சீமான், ஆண் பெண் குழந்தைகள் முதலிய எல்லோரும் சமமான யோக்கியதையும், சமமான புத்தியும், சமமான மரியாதையும் உடையவர்கள் என்ற கொள்கை வெள்ளைக்காரருடைய தேசங்களிலிருந்து கப்பல் மூலமாக வந்து பட்டணத்தில்தானே முதலில் இறங்குகிறது. அதனாலேதான் அந்த ஊர் வெளியூர்களை விட இவ்வளவு அதிகமாய் நாகரீகமடைந்திருக்கிறது. நீ அந்த ஊரில் இருப்பவள் ஆகையால், நீ இங்கிலீஷ் பள்ளிக்கூடங்களில் படித்து அந்த பாஷையில் அதிக தேர்ச்சி பெற்றிருக்கிறாய் என்பது நீ பேசுவதிலிருந்தே நன்றாகத் தெரிகிறது. நீ புத்திசாலித்தனமாகக் கேள்விகள் கேட்பதும் அழகாய்த்தானிருக்கிறது. வெளியூர்களில் உள்ள ஸ்திரீகளெல்லோரும் வாய் திறந்து ஒரு வார்த்தை கூட ஒழுங்காய்ச் சொல்லத் தெரியாத சுத்த ஆடுகளாய்! இருக்கிறார்கள். அவர்களுடைய கட்சி நியாயமானதாக இருந்தாலும், அதைப் புருஷரிடம் எடுத்துத் தெரிவிக்காமல் பயந்து கொண்டு மௌனமாகவே இருந்து விடுவார்கள். அப்படிக் கம்பங்கள் போல நின்று புருஷருக்குக் கோபம் உண்டாகும்படி செய்து அடியும் உதையும் சாப்பிடுவதை விட நீ பேசுவதுபோல இப்படி கணீர் கணீரென்று ஒவ்வொன்றுக்கும் உத்தரம் கொடுத்தால், அது மனசுக்கு எவ்வளவு திருப்தியாயிருக்கிறது!

போலி மணப்பெண்:- {நாணிக் குனிந்து சிறிது நேரம் மௌனமாய் நின்றபின்) நான் இனி பேசுகிறதா பேசக்கூடாதா என்பது தெரியவில்லை. நான் சொன்ன வார்த்தை தங்களுடைய மனசைப் புண்படுத்திவிட்டது போலிருக்கிறது. நான் பேசாமல் வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென்று பார்த்தாலும், அதுவும் முடியவில்லை. தாங்கள் கேட்பதற்கு நான் பதில் சொல்லாவிட்டால், அதுவும் தங்களை அவமதிப்பதுபோல