பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

19

ஏற்படுத்தப்பட்டிருந்த ஒரு மஞ்சத்தில் படுக்க வைத்துவிட்டு வந்த காலத்திலும் அவர்களது கவனம் அவன்மீது செல்லவில்லை. ஆகவே, இடும்பன் சேர்வை காரனும் மற்ற ஆட்களும் தாங்கள் மனோன்மணியையே அதிக பிரயாசை இன்றி எளிதில் கொண்டு வந்துவிட்டோம் என்ற எண்ணத்தோடு சென்றதன்றி, தூங்கிக் கொண்டிருந்த மாசிலாமணியையும் இடும்பன் சேர்வைக்காரன் எழுப்பி அந்த சந்தோஷச் செய்தியை அவனிடம் தெரிவித்து, மனோன்மணியின் அழகையும் அபாரமாக வர்ணிக்கவே மாசிலாமணியின்து மனதில் அளவற்ற மன எழுச்சியும், களிப்பும், குதுகலமும், பதைப்பும் தோன்றி வதைக்க ஆரம்பித்தன. தான் உடனே சென்று அவளது அற்புதமான அழகைக் கண்டு ஆனந்தம் அடைய வேண்டும் என்றும், அவளோடு சம்பாஷிக்க வேண்டும் என்றும் விலக்க முடியாத ஓர் அவா அவனது மனதில் எழுந்து தூண்டியது. ஆயினும் இடும்பன் சேர்வைகாரன், "எஜமானே! நீங்கள் ஆத்திரப்பட்டு இப்போது அந்த அம்மாளிடம் போவது உசிதமாகத் தோன்றவில்லை. நான் அந்த அம்மாளை மெத்தையில் படுக்க வைத்து, ஈரத்துணியால் முகத்தைத் துடைத்து, கட்டிலின் மேல் இருக்கும் மின்சார விசிறியை மெதுவாகச் சுழற்றிவிட்டு வந்திருக்கிறேன். அதுவுமன்றி இந்த இடம் பின்புறத் தோட்டத்தை அடுத்தாற் போல இருப்பதால், பின் பக்கத்து ஜன்னலின் கதவுகளையும் திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன். தோட்டத்தில் இருந்தும், மின்சார விசிறி சுழலுவதில் இருந்தும் ஜிலுஜிலுப்பான காற்று உண்டாகி முகத்தில் தாக்கும் ஆகையால், அந்த அம்மாளுடைய மயக்கம் இந்நேரம் தெளிய ஆரம்பித்திருக்கும் என்று நினைக்கின்றேன். நேற்று இரவில் அந்த அம்மாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது நாங்கள் திடீரென்று போய் மயக்க மருந்தை மூக்கில் பிடித்து, உணர்வை விலக்கி எடுத்துக் கொண்டு வந்திருக்கிறோம் ஆகையால், இப்போது விழித்துக் கொள்ளும் போது, மனோன்மணியம்மாள் தான் பட்டணத்தில் தன்னுடைய சொந்த ஜாகையில் இருப்பதாகவே எண்ணிக் கொள்வாள். அந்த நிலைமையில், இன்னார் என்பது தெரியாத அன்னியரான நீங்கள் போய் எதிரில் நின்றால், அந்த அம்மாள் பயந்து நடுங்கிக்