பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/212

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

மாயா விநோதப் பரதேசி

தந்திரமாக நடப்பவர்களாகவும் இருக்கிறபடியால், இதில் நாம் சுத்த பட்டவர்த்தனமாக நடந்து கொண்டால், அதனால் பல கெடுதல்கள் வந்து சேரும். பிறரைக் கெடுக்கவேண்டுமென்ற நோக்கத்தோடு நாம் அபாண்டமான மோசத்திலும் பொய்யிலும் இறங்கக்கூடாது. உலக வியவகாரங்களில், பிறருக்குக் கெடுதலில்லாமல், நம்முடைய காரியங்களை அநுகூலப்படுத்திக் கொள்வதற்கு, நாம் சில சமயங்களில் இப்படி உண்மையை மறைத்துத்தான் நடந்து கொள்ளவேண்டும். முக்கியமாக இது கலியாணமல்லவா. ஆயிரம் பொய் சொல்லி, ஒரு கலியாணத்தை முடி என்று நம்மவர்கள் சொல்வதில்லையா?

போலி மணப்பெண்:- ஆம் வாஸ்தவமே! கலியாணம் செய்வதற்கு முன் பொய் சொல்லலாம் என்றார்களேயொழிய அதற்குப் பிறகு சொல்லும்படி சுலோகம் சொல்லவில்லையே! கலியாணத்திற்குப் பிறகு பொய் சொன்னால், பிரியமும் அன்னியோன்னிய பாவமும் எப்படி ஏற்படும்? கலியாணத்திற்கு முன் சொன்ன பொய்யெல்லாம் மறையும்படி, அதன்பிறகு உண்மையாகவும் ஒழுங்காகவும் நடந்து கொண்டால்தான், அவ்வளவு பாடுபட்டுச் சம்பாதித்த பொருளினால் சரியான பலன் பெறலாம். தாங்கள் என்னைக் கலியாணம் செய்து கொண்ட பிறகு இப்போது கொஞ்ச நேரத்திற்கு முன்பல்லவா என்னிடம் பொய் சொன்னது?

மாசிலாமணி:- பேஷ்! பேஷ்! பலே பலே! இப்பேர்ப்பட்ட அபாரசக்தி வாய்ந்த மூளையை வைத்துக் கொண்டிருக்கும் நீ செம்மறியாடு தலையைக் குனிந்து மூலையில் ஒதுங்கி நிற்பதைப் போல நாணிக்கோணி விகாரமாக நிற்பதைப் பார்க்க, என் மனம் நிரம்பவும் பிரமிப்பை அடைகிறது. ஆணாகப் பிறக்க வேண்டிய நீ தவறிப் போய்ப் பெண்ணாகப் பிறந்துவிட்டாய் என்றே நினைக்கிறேன். மற்ற எல்லாப் பெண்களையும் விட அதிக அழகாயும் அதிக முகவசீகரத்தோடும் உன்னைப் படைத்த பிரமதேவன் உன் முக வசீகரத்தைக் கண்டு மதிமயக்கம் அடைந்து, ஆண் பிள்ளைக்கு வைக்கவேண்டிய மூளையை மறதியாய் உனக்கு வைத்துவிட்டானென்றே நினைக்கிறேன். இப்படி அவன்