பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

மாயா விநோதப் பரதேசி

தாங்கள் சொல்வதைப் பார்த்தால், அங்கே இருந்து வந்ததாகச் சொன்ன சமாசாரப் பத்திரிகையில் இவைகள் எல்லாம் வெளியிடப்பட்டிருக்கலாம் என்று நினைக்கிறேன். என்ன கருத்தோடு நாங்கள் அவர்களுடைய பங்களாவிற்குப் போனோம் என்பதை நான் சொல்வதற்கு முன், தங்களுடைய முக்கியமான கடைசி சந்தேகத்தை நிவர்த்திக்கிறேன். அந்தப் பங்களாவிற்கு என்னோடு கூட வந்தவர் என்னுடைய புருஷர் என்று நான் சொல்லிக் கொண்டேன் ஆனாலும், உண்மையில் அவர் என்னுடைய புருஷர் அல்லர்; அவர் என்னுடைய அம்மான் குமாரர்; அவருக்கு என்னைக் கட்டிக் கொடுப்பதற்குத் தான் ஏற்பாடாகி இருந்தது. அதற்குள் கடவுள் என்னை இங்கு கொணர்ந்து தங்களிடம் ஒப்படைத்திருக்கிறது. எனக்கு இன்னமும் கலியாணம் நடக்கவில்லை என்பதை நான் ருஜுப்படுத்தினால் அல்லாமல் தாங்கள் அதை நம்பவே மாட்டீர்கள். அதற்கும் தக்க ருஜுவிருக்கிறது. அன்றைய தினம் இரவில் தாங்கள் என்னை இங்கே கொண்டு வரப் போகிறீர்கள் என்பதை அறியாமல் நான் அங்கே தூங்கிக் கொண்டிருந்த நிலைமையில்தானே நான் இங்கே வந்தேன். இங்கே வந்த பிறகு என் கழுத்தில் தாலி இருந்ததை வேலைக்காரி பார்த்தாளா என்று விசாரித்துப் பாருங்கள். ஒருவேளை அவள் அதைக் கவனிக்காமல் இருந்திருக்கலாம். நான் அதைக் கழற்றி ஒளித்திருக்கலாம் என்று நீங்கள் சந்தேகிக்கக்கூடும். என்னை இதுவரையில் வைத்திருந்த விடுதிக்கு நீங்கள் உடனே போய் ஓரிடம் விடாமல் தேடிப் பாருங்கள்; அதுவுமன்றி, அங்கேயுள்ள ஜன்னல்களிற்கு அப்பாலும் போய்ப் பாருங்கள். நான் ஒரு வேளை அதை வெளியில் எறிந்திருப்பேனோ என்ற சந்தேகமும் நிவர்த்தியாகி விடும். தாங்கள் முதலில் இந்த முக்கியமான சந்தேகத்தை நிவர்த்தி செய்து கொண்டு வாருங்கள். மற்ற விவரங்களை நான் பின்னால் தெரிவிக்கிறேன்.

மாசிலாமணி:- நீ சொல்வது சரியான விஷயம். அந்தச் சந்தேகத்தை நான் முன்னரே தீர்த்துக் கொண்டேன். உன்னை முதன்முதலில் கண்ட வேலைக்காரி என்னிடம் வந்து உன்னுடைய அழகைப்பற்றிப் புகழ்ந்து பேசி நீ இன்னின்ன நகைகள் போட்டிருக்கிறாய் என்று சொன்னாள். உன் கழுத்தில் நீ