பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

215

இன்னின்ன நகைகள் தான் போட்டிருந்தாய் என்று அவள் சந்தேகமறத் தெரிந்து கொண்டவள் போலவே சொன்னாள். அந்த வேலைக்காரி மகா கூர்மையான புத்தியுடையவள். உன்னை நான் கட்டிக் கொள்ள உத்தேசிக்கிறேன் என்பது அவளுக்குத் தெரியும். உன் கழுத்தில் தாலி இருந்தால், அதை அவள் கவனிக்காமல் விட்டிருக்க மாட்டாள். ஆகையால், நீ தாலியோடு இங்கே வரவில்லை என்று நீ சொல்வதை நான் ஒப்புக்கொள்கிறேன். உனக்கு இன்னமும் கலியாணம் ஆகவில்லை என்பதையும் நான் உண்மை என்றே நம்புகிறேன். ஆனால், நீங்கள் இருவரும் வேலாயுதம் பிள்ளையின் மைத்துனன் மைத்துனி என்று பொய் வேஷம் போட்டுக் கொண்டு எதற்காக அந்தப் பங்களாவிற்குள் போனீர்கள்? அந்த வரலாற்றை மாத்திரம் நீ உள்ளபடி தெரிவித்து விட்டால், நான் உன்மேல் எவ்வித வெறுப்பும் கொள்ளாமல் உன்னையே என்னுடைய உயிருக்குயிரான பெண்சாதியாய் வைத்துக் கொள்ளுகிறேன். சமாசாரப் பத்திரிகையில் விஷயம் ஒரு மாதிரியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நீ பொய் சொன்னால், அது எனக்கு எப்படியும் தெரிந்து போகும். ஆகையால் எதையும் மறைக்காமல் நீ உண்மையைச் சொன்னால், அதனால் உனக்கு நீடித்த நன்மை ஏற்படும்.

போலி மணப்பெண்:- தாங்கள் தான் என்னை அக்கினி சாட்சியாகக் கட்டிக்கொண்ட பார்த்தாவாகி விட்டீர்கள். நான் அதிக புத்தி சாலித்தனமாகப் பேசுகிற குற்றத்தைத் தவிர தங்கள் விஷயத்தில் மனம், வாக்கு, காயம் ஆகிய திரிகரணசத்தியாய் நான் வேறு எவ்விதமான பிழையையும் செய்யவில்லை. தாங்கள் என்னைக் கலியாணம் செய்து கொள்ள உத்தேசிக்கிறதாகச் சொல்லி தங்களுடைய செல்வச் சிறப்பை விவரித்துச் சொன்ன காலத்தில், நான் தங்களுடைய புகைப்படம் ஒன்றைத் தருவித்துப் பார்த்தேன். அதைப் பார்த்தது முதல் என் மனமும் ஒரு நிலையில் நிற்காமல் பவவிதமாக சஞ்சலப்பட்டுக் கொண்டுதான். இருந்தது. இந்த இரண்டு மூன்று தினங்களாக உங்களுடைய இனிமையான முகம் என் கண்ணைவிட்டு மாறாமல் எதிரிலேயே நின்று கொண்டே தான் இருந்தது. இன்று முழுதும் எனக்கு அந்த விடுதியில் இருக்கை கொள்ளவே இல்லை. அதனாலேதான் நான் ஏழரை