பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

219

என்று நான் பக்குவமாகச் சொல்லி அவளுடைய மனசைக் கலைத்து விட்டேன். நாங்கள் வந்திருக்கும் சங்கதியை அந்தப் பெண் டெலிபோன் மூலமாகத் தன் தகப்பனாருக்குத் தெரிவித்தாள் போலிருக்கிறது. அவர் உடனே மன்னார்குடிக்குத் தந்தி அனுப்ப, அங்கிருந்து வேலாயுதம் பிள்ளை தமக்கு மைத்துனியே யாரும் இல்லை என்று மறு தந்தி கொடுத்து விட்டார். அதை எடுத்துக் கொண்டு பட்டாபிராம பிள்ளை பங்களாவிற்கு வந்து சேர்ந்து போலீசாரை வரவழைத்து எங்களைச் சிறைப்படுத்தி விட்டார். என்ன சமாதானம் சொல்வதென்பதை அறியாமல் நாங்கள் விழித்துக் கொண்டு பேசாமல் இருந்தோம். அன்றைய தினம் இரவில், அவர்கள் என்னை மனோன்மணியின் படுக்கை அறையில் தனியாக விட்டுப்பூட்டி இருந்தார்கள். நான் தூங்கிக் கொண்டு இருக்கையில், தங்களுடைய ஆள்கள் வந்து, நான் தான் மனோன்மணியம்மாள் என்று எண்ணிக் கொண்டு விட்டார்கள் போலத் தோன்றுகிறது. இதுதான் எங்களுடைய உண்மையான வரலாறு. இதில் தங்களுக்கு இன்னமும் எவ்வித சந்தேகம் இருந்தாலும் நான் நிவர்த்தி செய்யத் தடையில்லை.

மாசிலாமணி:- (மிகுந்த வியப்பும் களிப்பும் அடைந்து) பெண்ணே! நீ சொன்னதெல்லாம் உண்மையான வரலாறு தான் என்பது நிச்சயமாகத் தெரிகிறது. இனி உன்மேல் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. கடவுள் எல்லாவற்றையும் நல்ல நோக்கத்தோடு தான் செய்கிறார். நாங்களும் அவர்களுக்குப் பகைவர்கள். நீங்களும் அவர்களுக்குப் பகைவர்கள். இருவரும் தனித்தனியாக வேலை செய்தால் பலவீனம் என்று நம் இருவரையும் கடவுள் ஒன்று சேர்த்துவிட்டு இருவரும் சேர்ந்து அவர்களை சம்ஹாரம் செய்யுங்கள் என்று இந்தக் காரியத்தைச் செய்திருக்கிறார். நீ சொல்லும் சுவீகார வியாஜ்ஜியம் நடந்தது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. வக்கீல் சட்டைநாத பிள்ளையின் தம்பிதான் நான். நீங்கள் பணம் கொடுத்ததெல்லாம் எனக்குத் தெரியும். ஆகை யால், உங்களுக்கு எங்களால் ஏற்பட்ட பெருத்த பண நஷ்டத்தைக் கருதியாவது நாங்கள் உங்களுக்கு உதவி செய்யக் கடமைப்பட்டவர்கள் அல்லவா. அதனால், கடவுள் உன்னை நான் மணந்து கொள்ளும்படி செய்தார் போலிருக்கிறது. மெத்த சந்தோஷ