பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

224

மாயா விநோதப் பரதேசி

தங்களுடைய பெருந்தன்மையையும் காருண்யத்தையும் தாங்கள் இந்தச் சமயத்தில் கொஞ்சம் காட்டி, நாளைய இரவு வரையில் என்னை மன்னித்துவிடக் கோருகிறேன். அதுவுமன்றி, இந்த சயனக் கிரகத்தில் உண்டாகும் அபாரமான வாசனையை இந்த நிலைமையில் நான் தாங்க முடியவில்லை ஆகையால், நான் மூன்னே இருந்த விடுதிக்கே போய்ப்படுத்துக் கொள்ளுகிறேன். என் உடம்பு நிலை கொள்ளாமல் தத்தளிக்கிறது. தங்களுக்கு இன்னமும் என்மேல் சந்தேகமாய் இருந்தால் தாங்கள் வேலைக்காரியைக் கொண்டு முன் போல வெளியில் தாளிடச் செய்யுங்கள்" என்றான்.

அதைக் கேட்ட மாசிலாமணி, "பெண்ணே! உன் அம்மான் குமாரர் இருக்கும் கேவலமான நிலைமையை உணர்ந்ததால், உன் மனம் கவலைப்பட்டு வருந்துவது சகஜமே. இந்த நிலைமையில், உன் மனசைப் புண்படுத்தி, நான் உன்னிடம் சுகம் அனுபவிக்க எண்ணுவது ஒழுங்காகாது. ஆகையால், உன் இஷ்டப்படி நாம் இந்த முகூர்த்தத்தை நாளைய தினமே நடத்துவோம். நீ முன் இருந்த விடுதிக்குப் போய்ப் படுத்துக்கொள். இனி நீயே இந்த மாளிகைக்கும், என் அபாரமான ஐசுவரியத்திற்கும், இங்கேயுள்ள என் ஆள் மாகாணங்களுக்கும் எனக்கும் எஜமானியாகிவிட்டாய். அப்படி இருக்க, உன்னை நான் இனி முன்போல நடத்துவது நியாயமல்ல. உன்னை நான் இனி சிறைவைக்க வேண்டிய அவசியமே இல்லை. நீ உன் இஷ்டப்படி இந்த மாளிகையை சுயேச்சையாய் உபயோகப்படுத்திக் கொண்டு, நீ எங்கே வேண்டுமானாலும் இருக்கலாம்; வேலைக்காரிகளை உன் பிரியப்படி ஏவலாம், நீ போய்ப்படுத்துக்கொள். நானும் போகிறேன்" என்று வாஞ்சையாகவும் உருக்கமாகவும் கூறினான். அதைக் கேட்ட போலி மணப்பெண் அவனைப் பார்த்து அழகாகவும் இனிமையாகவும் புன்னகை செய்து, தனது வாஞ்சையையும், நன்றியறிதலின் பெருக்கையும் தோற்றுவிப்பவள் போல நடித்து விட்டு அன்னநடை நடந்து நாணிக் குனிந்தபடி அந்த சயனக் கிரகத்தை விட்டு வெளியில் போய்விட்டாள். அவளது பின்னழகையும், நடையழகையும், சாயலழகையும் கண்ணிமை கொட்டாமல் பார்த்து பிரமிப்பும் உவப்பும் கொண்டவனாய்ச் சிறிது