பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

233

காலில் பாதஸரம் பட்டைக்கொலுசு முதலியவைகளையும் அணிந்திருந்ததும் ஒன்றுகூடி அவளது அழகையும் வசீகரத் தன்மையையும் நூறு மடங்கு அதிகரிக்கச் செய்தன. அத்தர், அம்பர், ஜவ்வாது முதலியவற்றின் வாசனையூட்டப் பெற்ற பட்டுக் கைக்குட்டை ஒன்றை அவள் தனது கையில் பிடித்துக் கொண்டிருந்தாள். அழகிலும், அலங்காரத்திலும் தன்னை மீறக் கூடியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்ற எண்ணம் அவளது மனதில் இருந்தது ஆகையால், தான் போகும் இடத்தில் உள்ள ஜனங்கள் எல்லோரும் தன்னைக் கண்டு பிரமிப்படையச் செய்வதும், அதனால் தன் மனம் திருப்தி அடைய வேண்டும் என்பதும் அவளது முக்கிய நோக்கமாக இருந்தன. ஆகவே, அவள் வண்டியை விட்டுக் கீழே இறங்கிய வுடனே, தனது கைக் குட்டையை எடுத்து, தான் வண்டியில் உட்கார்ந்திருந்ததால், புடவையில் பட்ட தூசியைத் தட்டிவிட்டு, தனது ஆடையாபரணங்களைச் சீர்திருத்தி வண்டியின் ஒட்டத்தில் ஏற்பட்ட அதிர்ச்சியினால், தங்கப்பாளம் போலிருந்த தனது முகத்தில் முத்து முத்தாகத் துளித்திருந்த வியர்வைத் துளிகளைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்து நாணிக்கோணி உல்லாசமாகவும் கம்பீரமாகவும் நடந்து முதல் வகுப்புச் சீமாட்டிகளின் விடுதிக்குள் போய்ச் சேர்ந்தாள். அவ்வாறு அவள் போய்ச் சேருவதற்குள், அவள் நாற்புறங்களிலும் தனது பார்வையைச் செலுத்தி அங்கிருந்த சகலமான ஜனங்களும் தன்னையே பார்த்துத் தனது ஒப்புயர்வற்ற அழகைக் கண்டு பிரமிப்படைந்து விட்டார்கள் என்று நினைத்து அளவற்ற செருக்கும் மன எழுச்சியும் அடைந்து மெய்ம்மறந்தவளாய் உள்ளே சென்றாள். அதுவுமன்றி, அவளது தாய் தகப்பன்மார் அவளுக்கு வாய்த்த அபாரமான ஐசுவரியத்தைக் கருதி அவளிடம் அடங்கி ஒடுங்கி வேலைக்காரன்போல நடந்து கொண்டனர் ஆதலால், தன்னை அடக்குவாரும், தன் அதிகாரத்திற்கு மிஞ்சிய வரும் இந்த உலகத்திலேயே இல்லை என்ற எண்ணம் உறுதியாக அவளது மனதில் வேரூன்றி இருந்தது ஆகையால், தனது நிலைமை ஒரு கவர்னர் ஜெனரலுடைய நிலைமையைவிட மேலானது என்ற அகம்பாவமும் மனத்துணிவும் கொண்டவளாய்த் தனது பெற்றோரையும், போயி