பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

252

மாயா விநோதப் பரதேசி

வேறே அன்னியர் யாருமில்லை. ஏனம்மா! நீங்கள் இப்போது ஏறினர்களே? அது எந்த ஊர்?

விதவையம்மாள்:- அது சிதம்பரம்.

ர. தாய்:- நீங்கள் தனியாகப் போகிறீர்களே! உங்களுடைய சொந்த ஊரே சிதம்பரந்தானோ?

விதவையம்மாள்:- இல்லை இல்லை. சிதம்பரத்தில் நடராஜா வின் தரிசனத்திற்காக நான் வந்திருந்தேன். அங்கே நாலைந்து நாள் தங்கி சுவாமி தரிசனம் செய்து கொண்டு அங்கிருந்து பட்டணம் போகிறேன்.

ர. தாய்:- ஓகோ அப்படியா உங்களுடைய சொந்த ஊர் பட்டணம் போலிருக்கிறது.

விதவையம்மாள்:- இல்லை இல்லை. என்னுடைய சொந்த ஊர் பட்டணமல்ல. தெற்கே திருவரங்கம் என்ற ஓர் ஊர் இருக்கிறதாக நீங்கள் கேள்வியுற்றிருக்கலாம். அதை அடுத்தாற்போல நீர்மேல் குமிழி என்று ஒரு சிறிய கிராமம் இருக்கிறது. அதுதான் என்னுடைய சொந்த ஸ்தலம். நான் புண்ணிய ஸ்தலங்களைச் சுற்றிப் பார்த்து சுவாமி தரிசனம் செய்து கொண்டே யாத்திரை போகிறேன்.

ர. தாய்:- இப்போது நேராகப் பட்டணம் போகிறீர்களா, அல்லது, வேறே ஏதாவது ஊருக்குப் போகிறீர்களா?

விதவையம்மாள்:- நேராகப் பட்டணம் போய் அந்த ஊரில் சில தினங்கள் தங்கி, அதற்குப் பக்கத்தில் உள்ள திருமயிலை க்ஷேத்திரம், திருவொற்றியூரில் பட்டணத்துப் பிள்ளையார் அடக்கமான இடம், திருத்தணிகை முதலிய புண்ணிய ஸ்தலங்களை எல்லாம் தரிசித்துக் கொண்டு, அரக்கோணம் மார்க்கமாய்த் திருவண்ணாமலைக்குப் போய்விட்டுத் திரும்பலாம் என்று உத்தேசிக்கிறேன்.

ர. தாய்:- ஓகோ! அப்படியா! உங்களைப் பார்த்தால் பெரிய மனுவியாள் போல இருக்கிறது. இவ்வளவு தூரதுரமான இடங்களுக் கெல்லாம் வேறே யாரும் துணையில்லாமல்