பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

254

மாயா விநோதப் பரதேசி

அன்னம் கொடுக்கமாட்டீர்களா? இது போலவே, நான் எங்கே போனாலும், நல்ல மனிதர்களின் சங்கமமே எனக்கு ஏற்படுகிறது. ஆகையால், நமக்கு வேறே யாரும் துணையில்லையே என்ற எண்ணமாவது குறையாவது எனக்கு இருந்ததே இல்லை. எல்லா ஜனங்களையும் தெய்வம் காப்பாற்றுகிறதென்பது உங்களுக்குத் தெரியாத விஷயமல்ல. தெய்வம் நேரில் வந்து ஒவ்வொரு வரையும் காப்பாற்றாமல், ஒரு மனிதரைக் கொண்டே இன்னொரு மனிதரைக் காப்பாற்றுகிறது. நம்மைக் காப்பாற்ற நம்முடைய சொந்தக்காரர்கள்தான் நம்மோடுகூட வரவேண்டும் என்ற அவசியமே இல்லையல்லவா. உலகத்தில் உள்ள நல்ல மனிதர்கள் எல்லோரும் ஒருவருக்கு ஒருவர் அன்னியோன்னிய பாவமுள்ள நெருங்கிய பந்துக்களே. அவர்கள் எல்லோரும் தனியான ஒரு பெரிய குடும்பத்தைச் சேர்ந்த பந்துக்கள் ஜீவகாருண்யம் என்ற பாந்தவ்வியத்தைவிட மேலான வேறே பாந்தவ்வியம் இந்த உலகில் இருக்கிறதா?

ர. தாய்:- ஆம் அம்மா! நீங்கள் சொல்வது நிஜமான வார்த்தை. சொந்தக்காரர்களை விட அன்னியர்கள் தான் நம் விஷயத்தில் அதிகமாக இரங்கி உதவி செய்கிறார்கள் என்பது தெரிந்த விஷயந் தானே. இருந்தாலும், நம்முடைய அக்ஞானம் போகிறதா? யாராவது நம்முடைய சொந்தக்காரர் கூட இருக்க வேண்டும் என்று நம்முடைய மனம் எண்ணுகிறதேயொழிய, அங்கங்கே பரோப காரிகள் இருப்பார்கள் என்று நினைத்துத் துணிந்து நாம் வெளியில் புறப்பட்டு விடுகிறதில்லை. இருந்தாலும் நீங்கள் நிரம்பவும் துணிந்துதான் தனியாகப் பிரயாணம் செய்கிறீர்கள். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், உங்களுக்குப் பிள்ளை குட்டிகள் யாருமில்லை என்றே நினைக்க வேண்டியிருக்கிறது.

விதவையம்மாள்:- எனக்குப் பிள்ளையும் இல்லை; குட்டியும் இல்லை. அந்த ஒரு குறையைத் தான் எனக்குக் கடவுள் வைத்துவிட்டார். எனக்கு வேறே யாதொரு குறையுமில்லை. நான் சொன்ன நீர்மேல்குமிழி என்ற கிராமத்தில் என்னுடைய எஜமானர் தான் முதன்மையான மிராசுதார். எங்களுக்கு மூன்று போக நஞ்சை நிலம் ஐம்பது வேலி இருக்கிறது. மூன்று கட்டுகளும் இரண்டு