பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

258

மாயா விநோதப் பரதேசி

யாராவது உயிரை விட்டுவிட முடியுமா? அவரவர்கள் வாங்கி வந்த விதியைத் தொலைத்து, அவரவர்களுக்கு ஏற்பட்ட ஆயிசுகாலம் வரையில் உலகத்தில் இருந்துதான் போக வேண்டும். இந்த உலகப் பற்று இல்லாதவருக்கு அந்த உலகப் பற்று என்று ஜனங்கள் சொல்லுவார்கள். அது போல, நீங்கள் இனி உங்களுக்குள்ள மிகுதி ஆயிசு காலத்தை ஈசுவர பக்தியில் செலவிட்டால், அடுத்த ஜென்மத்திலாவது உங்களுக்குச் சுகிர்தம் கிடைக்கும். ஆனால், நீங்கள் தேசயாத்திரை செய்த பிறகு உங்களுடைய சொந்த ஊரில்தானே போய்த் தங்க வேண்டும்?

விதவையம்மாள்:- இருந்திருந்து மறுபடி நான் அந்த ஊருக்குத் தானா போக வேண்டும்! எனக்கு இனி அது சொந்த ஊர் அல்லவே அல்ல. என் மனசுக்கு எந்த ஊர் பிடிக்கிறதோ அது தான் இனி எனக்குச் சொந்த ஊர்.

ர. தாய்:- ஆம். நீங்கள் இந்த மூன்று மாசகாலமாய் யர்த்திரை செய்கிறீர்களே, எந்த ஊரும் உங்கள் மனசுக்குப் பிடிக்கவில் லையா? நீங்கள் எப்போதும் நிரந்தரமாக இருப்பதற்கு எந்த ஊரை யாவது மனசில் குறிப்பிட்டு வைத்துக் கொண்டிருக்கிறீர்களா.

விதவையம்மாள்:- நான் இந்த மூன்று மாச காலத்தில் எத்தனையோ ஊர்களைப் பார்த்தேன். அநேக ஊர்கள் வாசத்திற்கு யோக்கியமாகத் தான் இருக்கின்றன. ஆனாலும், என் மனசுக்கு எதெதில் பிரியம் தெரியுமா? ஊர் காவிரியாற்றை அடுத்ததாக இருக்க வேண்டும். அந்த ஊர் பட்டிக்காடாக இருக்கக் கூடாது. அவ்விடத்தில் விஷ்ணு ஆலயம் சிவாலயம் முதலிய ஆலயங்கள் ஏராளமாக இருக்க வேண்டும். எப்போதும் மங்கள கரமாக கோவில்களில் மேளமும் திருவிழாவும் சுவாமி புறப்பாடு மாக இருக்க வேண்டும். அதோடு ஜனங்களும் நம்முடைய பழைய பழக்கவழக்கங்களை அனுசரித்து சன்மார்க்கத்தில் ஒழுகுகிறவர்களாக இருக்க வேண்டும். விடிந்தெழுந்தால் காவிரியில் ஸ்நானம் செய்து, கோவில்களுக்குப் போய் சுவாமி தரிசனம் செய்து, நல்ல வார்த்தைகளையே எப்போதும் காதால் கேட்டு, நல்ல காரியங்களையே எப்போதும் செய்து என் வாழ்நாட்களைக் கடத்த வேண்டும் என்பது என்னுடைய உத்தேசம். அந்த