பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

260

மாயா விநோதப் பரதேசி

பணத்தை எறிந்தால், நல்ல ஜாகைக்குப் பஞ்சமா? வேண்டிய இடம் கிடைக்கும். அதோடு, நாம் நல்லவர்களாக இருந்தால், துஷ்டர்கள் கூட நம்முடைய விஷயத்தில் நல்லவர்களாக நடந்து கொள்வார்கள். உங்களுடைய குணத்திற்கு, நீங்கள் நல்லவர் களைத் தேடி அலைய வேண்டியதே இல்லை. அதிருக்கட்டும்; இவ்வளவு தூரம் கேட்டபிறகு, உங்களுடைய பெயர் இன்ன தென்று தெரிந்து கொள்ள, என் மனம் ஆசைப்படுகிறது.

விதவையம்மாள்:- என்னை நீலலோசனியம்மாள் என்பார்கள்.

ர. தாய்:- ஓகோ! அப்படியா! ஆம்; நீங்கள் ஒரு செட்டியாரிடம் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்து வைத்திருப்பதாகச் சொல்லுகிறீர்களே, அதை நீங்கள் அப்படியே தான் கடைசி வரையில் வட்டிக்கு விட்டு வைக்க உத்தேசிக்கிறீர்களா? அவர் நூற்றுக்கு என்ன வட்டி கொடுக்கிறார்?

விதவையம்மாள்:- அது பெருத்த தொகை. அதுவுமன்றி, அவருடைய அவசரத்துக்கென்று அவர் என்னிடம் கடன் வாங்கி இருந்தால் அவர் அதிகவட்டி கொடுப்பார். நான் என்னுடைய பணம் எங்கேயாவது தக்க இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நானாகவே அவரிடம் கொடுத்து வைத்திருக்கி றேன். ஆனாலும், செட்டியார் நிரம்பவும் யோக்கியமான மனிதர் ஆகையால், அவர் நூற்றுக்குக் கால்வட்டி வீதம் அனுப்பிக் கொண்டு வருகிறார். அந்தப் பணத்தை நான் அவரிடத்திலேயே வைத்திருக்க உத்தேசிக்கவில்லை. நான் நிலையாக ஓர் ஊரில் தங்குகிற வரையில் தான் பணம் செட்டியாரிடம் இருக்கும். பிறகு நான் அதை வாங்கி என் கையில் ரொக்கமாக வைத்துக் கொண்டு, தானம், தருமம் முதலிய காரியங்களை ஏராளமாகச் செய்ய எண் ணுகிறேன். முக்கியமாக என்னை ஆயிசுகால பரியந்தம் வைத்து சாப்பாடு போட்டு யார் அன்பாகக் காப்பாற்றுகிறார்களோ, அவர்களுக்கே அநேகமாய் அந்தத் தொகையில் பெரும் பாகத் தையும் கொடுத்துவிட உத்தேசிக்கிறேன். அதைக் கருதித்தான், எனக்கு நல்ல மனிதராக வேண்டும் என்று நான் சொன்னது.