பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

267

றன. அது என்ன காரணத்தினாலோ தெரியவில்லை" என்றாள்.

அவர்கள் இருவரும் கூறிய வார்த்தைகளைக் கேட்ட நீலலோசனியம்மாள் கட்டிலடங்கா மன எழுச்சியும் ஆனந்தமும் கொண்டு பூரிப்படைந்தவளாய், "ஆகா! என் கண்ணே, நீ எனக்கு வளர்ப்புப் பெண்ணாக வருகிறேன் என்றா சொல்லுகிறாய்! நான் அவ்வளவு தவம் செய்திருக்கிறேனோ! நாடோடியாய்த் திரிகிறவளான எனக்கு உங்கள் தாய் தகப்பன்மார் உன்னை வளர்ப்புப் பெண்ணாகக் கொடுப்பார்களா? அப்படிப்பட்ட துணிகரமான சொல்லை நான் உபயோகித்தால், எனக்கு உடனே உன் தாய் தகப்பன்மார் சரியான மரியாதை நடத்தமாட்டார்களா? அம்மா! குழந்தாய்! மகா லக்ஷமிையின் அவதாரம் போல இருக்கும் நீ எனக்கு அபிமான புத்திரி ஆவதாய்ச் சொல்லுவதை நான் மறுத்தால், தானாய் வரும் பூரீதேவியை வேண்டாம் என்று விலக்குவது போல் அல்லவா முடியும். இப்போது என்னிடம் மிஞ்சியிருக்கும் சொற்ப லக்ஷமிைகடாக்ஷமும் உடனே என்னை விட்டு விலகி விடுவது நிச்சயம். என்னைக் கண்டு உன் மனசில் ஒரு விதமான பாசமும் வாஞ்சையும் சுரப்பதாக நீ சொல்வது போலவே, என் மனசிலும் அதே உணர்ச்சிகள் எழுந்து கரை புரண்டு வழிகின்றன. நாம் முன் ஜென்மங்களில் நெருங்கிய பந்துக் களாகவாவது, ஆருயிர் நேசர்களாகவாவது இருந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால், இப்படிப்பட்ட உணர்ச்சிகள் உண்டாகமாட்டா" என்றாள்.

உடனே ரமாமணியின் தாய், "ஆம் அம்மா! நீங்கள் சொல்வது சரியான விஷயமே. முன் ஜென்மத்தில் நாம் இதற்கு முன் ஒருவரிடத்தொருவர் மிகுந்த பிரியம் வைத்ததாகத்தான் இருந்திருக்க வேண்டும். இடை இடையில் துங்கி விழிப்பது போல, நாம் பிரிந்திருந்து மறுபடி இப்போது சேருகிறோம்" என்றாள்.

ரமாமணியம்மாள் முன்னிலும் அதிக பணிவாகவும் இனிமையாகவும் பேசத் தொடங்கி, "அம்மா! வளர்த்துக் கொள்வதென்றால் நான் என்னுடைய தாய் தகப்பன்மாரை விட்டுத் தனியாக உங்களுடைய ஊருக்கே வந்துவிட வேண்டுமோ?" என்றாள்.