பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே.துரைசாமி ஐயங்கார்

25

உள்ளுக்குள்ளாகவே கவலைப்பட்டுக் கொண்டுதான் இருந்தது. அதன் முடிவு எப்படி ஆயிற்று என்று, உங்களிடம் கேட்டால், நீங்கள் ஒரு வேளை அது பலிக்காமல் போய்விட்டதென்று சொல்லி விடுவீர்களோ என்று நினைத்து நான் அதைப்பற்றி விசாரிக்க மனம் இல்லாதவனாய் இருந்தேன். சாமியார் விஷயத்தில் நம்முடைய யோசனை சுலபத்தில் பலித்தது உண்மையிலேயே நமக்கு நல்ல காலம் பிறந்து விட்டதென்பதைப் பரிஷ்காரமாகக் காட்டுகிறது. இனி நமக்கு மற்ற எவரும் நிகருமில்லை, ஒரு பொருட்டுமில்லை. இனி மிகுதியுள்ள நம்முடைய பகைவர்களை எல்லாம் ஒரு கொசுவை அடிப்பது போல வெகு சுலபத்தில் நாம் நாசப்படுத்தி விடலாம். அதிருக்கட்டும். சாமியார் மாண்டுபோன விஷயம் உங்களுடைய தமயனாருக்குத் தெரியுமா?

மாசிலாமணி:- ஆகா! தெரியும். மன்னார்குடியில் இருந்து நம்முடைய ஆள் நேற்று சாயுங்காலம் தான் வந்து சாமியாருடைய தகனம், சஞ்சயனம் முதலியவை நடந்த வரலாற்றைத் தெரிவித்தான். நான் உடனே அண்ணனிடம் போய் எல்லாவற்றையும் சொன்னேன்.

இடும்பன் சேர்வைகாரன்:- (வியப்போடு) நேற்று சாயுங்காலம்தானா நம்முடைய ஆள் அங்கே இருந்து வந்தான்?

மாசிலாமணி:- வெள்ளிக்கிழமை முழுதும், அவன் திகம்பர சாமியாருடைய பங்களாவின் வாசலில் கூடியிருந்த ஜனக் கும்பலில் மறைந்திருந்தானாம். அன்றைய தினம் சாயுங்காலம் வரையில் முடிவான சங்கதி ஒன்றும் தெரியவில்லையாம். சாமியாரைப் பாம்பு கடித்துவிட்டதென்றும், அவன் ஸ்மரணை இல்லாமல் கிடக்கிறான் என்றும், அவன் பிழைப்பது புனர் ஜென்மம் என்றும் போலீசார் சொல்லிக் கொண்டிருந்தார்களாம். அப்படிப்பட்ட சந்தேககரமான நிலைமையில் அவ்விடத்தை விட்டு வருவதைவிட, மேலும் கொஞ்ச நேரமிருந்து, அவன் இறந்து போகிறானா அல்லது பிழைத்துக் கொள்ளுகிறானா என்ற முடிவை நிச்சயமாகத் தெரிந்து கொண்டு ஒரேயடியாக வந்து விடலாம் என்று நம்முடைய ஆள் அன்றைய இரவு வரையில்