பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மாயா விநோதப் பரதேசி

போடப்போகிறாய்; கடவுள் கிருபையால், இன்னும் கொஞ்ச காலம் வரையில் நான் பிழைத்திருந்தால், உன் மனம் திருப்தி அடையும்படி நான் சாப்பிடக் காத்திருக்கிறேன்" என்றாள்.

உடனே விசாலாகூஜியம்மாள் தனது மகளைப் பார்த்து, "ஆம் குழந்தாய்! அவர்கள் சொல்வது சரியான சங்கதி. அவர்களுக்கு உடம்பு சரியாய் இல்லாத சமயத்தில் அகாலவேளையில், தின் பண்டங்களைக் கொடுப்பது பிசகு. அவர்கள் தான் இனி நம்முடைய மனிதர் ஆகிவிட்டார்கள். செய்கிற விருந்தை எல்லாம் நாளை முதல் செய்வோம்" என்று கூற, நீலலோசனியம்மாள் தேச யாத்திரை புறப்பட்டுவர நேர்ந்த வரலாறு முழுதையும் ரமாமணியம்மாளுக்குச் சுருக்கமாகத் தெரிவித்தாள். ஆரம்பத்தில், ரமாமணி யம்மாள் பக்கிரியா பிள்ளையோடு தனியாய் இருந்த போதே அவள் மேற்படி வரலாறுகளை எல்லாம் கேட்டுக் கொண்டே இருந்தாள் என்பதும், அவள் நீலலோசனி யம்மாளிடத்தில் உள்ள ஐந்து லட்சம் ரூபாயையும் அபகரித்துவிட வேண்டும் என்ற கருத்தோடு அவ்வாறு தந்திரமாக நடித்தாள் என்பதும் முன்னரே கூறப்பட்டன. ஆகவே, அவள் தனது தாய் இரண்டாம் முறை அதே வரலாற்றைத் தெரிவித்ததைக் கேட்டு, அப்போதே அதைப் புதிதாய்த் தெரிந்து கொண்டவள் போல அளவற்ற வியப்பும், விசனமும், அனுதாபமும், இரக்கமும் கொண்டவள் போல நடித்து நீலலோசனியம்மாளை நோக்கி, "அம்மா! உங்களுடைய வரலாறு கல்லும் கரையும்படியான மகா துக்ககரமான வரலாறாக இருக்கிறது. ஈசுவரன் நல்லவர்களைத் தான் இப்படி சோதிக் கிறான். இடையில் அவர்களுக்குப் பல கஷ்டங்களும் வேதனைகளும் நேர்ந்தாலும், முடிவில், அவர்கள் நிரந்தரமான நன்மையையும் கடவுளின் அருளையும் பூர்த்தியாகப் பெறுவார்கள். எங்களால் ஆன உதவிகளைச் செய்து ஆறுதல்களைச் சொல்லி உங்களை இனி எப்போதும் நாங்கள் நல்ல நிலைமையில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்தோடுதான் சர்வேசுவரன் நம்மை இப்படிச் சேர்த்து வைத்தார் போலிருக்கிறது. முதலில் நீங்கள் வந்து ஏறிய காலத்தில், நாம் தனியாய் இருப்பதற்கு இடைஞ்சலாக யாரோ வந்து விட்டார்களே என்று நினைத்து நாங்கள் எங்களுக்குள் சங்கடப்பட்டோம். இப்போது உங்