பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

273

என்றும், தங்களுடைய சதியாலோசனை பக்கிரியா பிள்ளைக்குத் தெரியாமல் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் தங்களுக்குள் தீர்மானித்துக் கொண்டனர்.

அதன் பிறகு ரமாமணியம்மாள் பக்கிரியா பிள்ளையிடம் தந்திரமாய்ப் பேசி, நீலலோசனியம்மாள் கும்பகோணத்தில் தங்களுடைய வீட்டின் இரண்டாவது கட்டை வாடகைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், அவளும் பட்டணத்தில் தங்களோடு கூடவே இருந்து கூடவே திரும்பி கும்பகோணத்திற்கு வரப் போகிறாள் என்றும் கூறியதன்றி, இடும்பன் சேர்வைகாரனுக் கெதிரில், பக்கிரியா பிள்ளை நீலலோசனியம்மாளுடைய பிள்ளை போல நடித்து, அவளோடு கூடவே நெருங்கிப் பழகிக் கொண்டிருக்க வேண்டும் என்றும், தனது தகப்பனார் ஒருவரைத் தவிர, மற்றவரை பக்கிரியா பிள்ளை ஏறெடுத்துப் பார்க்கக்கூடாது என்றும் கண்டிப்பாகத் தெரிவித்து வைத்தாள். அதைக் கேட்ட பக்கிரியா பிள்ளை எந்த விஷயத்திலும் ரமாமணியம்மாளின் விருப்பப்படியே நடந்து கொள்வதாக உறுதி கூறினான்.

அவ்வித ஏற்பாடுகளை எல்லாம் செய்த பின்னர், ரமாமணியம்மாளும், அவளது பெற்றோரும் முன்போல, நீலலோசனியம்மாள் இருந்த சோபாவிற்கு எதிரில் உட்கார்ந்து கொண்டு ஒன்றையும் அறியாத பரமசாதுவைப் போல நடித்துக் கொண்டிருந்தனர். வெள்ளிக்கிழமை இரவில் அங்கஹறினம் நிறைவேறிய பிறகு, இடும்பன் சேர்வைகாரனையும் அவனது ஆட்களையும் அனுப்பி விட்டு தனக்கு உடம்பு அசெளக்கியமாக இருக்கிறதென்ற முகாந்திரத்தை வைத்துக் கொண்டு தாங்களும் பக்கிரியா பிள்ளையும் சென்னையில் சுமார் ஒரு மாதகாலம் இருந்துவிட்டுப் போக வேண்டும் என்று அதற்கு முன் செய்த ஏற்பாடெல்லாம் ஒரு நிமிஷத்தில் தலைகீழாக மாறிப் போய்விட்டது. வெள்ளிக்கிழமை இரவில் தாம் செய்ய உத்தேசித்த பெரிய காரியத்தை நிறைவேற்றி விட்டு, மறுநாள் இரவிலேயே தாம் நீலலோசனியம்மாளை அழைத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பிவிட வேண்டும் என்று அவர்கள் முடிவு செய்து கொண்டனர். திருத்தணிகை, திருவண்ணாமலை முதலிய ஸ்தலங்களுக்குத் தான் அவசியம்

மா.வி.ப.II-18