பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

275

செய்து வந்தவன். ரமாமணியம்மாள் தனது புருஷருக்கு விஷம் வைத்து அவரைக் கொன்ற போது, அந்த போயியே ஒரு இருந்து ரகசியமாக அவளுக்கு விஷம் வாங்கிக் கொடுத்தவன். தன் புருஷனைக் கொல்வதற்கு அவள் விஷம் கேட்கிறாள் என்பதை உணர்ந்தும், அவன் அவளது தயவைச் சம்பாதித்துக் கொள்வதற்காக, அவ்வாறு அவளுக்கு உடந்தையாய் இருந்து விஷம் வாங்கிக் கொடுத்தான். அந்தக் காலத்தில் மாசிலாமணிக்கும் அவளுக்கும் திருட்டு நட்பு உண்டு என்பதும் அவன் அறிந்த விஷயமே. ஆனால், அதன் பிறகு அவள் ரகசியத்தில் பக்கிரியா பிள்ளையின் நட்பைச் சம்பாதித்துக் கொண்டு, அவனைப் பகல் வேளைகளில் வீட்டின் பின்வாசலின் வழியாக வரவழைத்து அவனோடு உல்லாசமாக இருந்து வருகிறாள் என்பதை அந்தப் போயி தெரிந்து கொள்ளவில்லை ஆதலால், அவனுக்கும் பக்கிரியா பிள்ளை புதிய மனிதனாகவே தோன்றினான். ஆகவே பக்கிரியா பிள்ளையும் நீலலோசனியம்மாளும் அநேகமாய்த் தாய் பிள்ளை முறைமை உடையவர்களாகத்தான் இருக்க வேண்டும் என்று சேர்வை காரனும், போயியும் யூகித்துக் கொண்டதன்றி, அவர்களைப் பற்றி ரமாமணியின் தந்தை கூறிய விருத்தாந்தத்தை அப்படியே ஏற்றுக் கொண்டனர். ஆனால், அவர்கள் எப்போதும் தம்முடன் கூடவே இருந்தால், தாம் எண்ணிவந்த காரியத்தை நிறைவேற்றுவதற்கு அது ஓர் இடையூறாக இருக்குமே என்ற சந்தேகம் இடும்பன் சேர்வைகாரனது மனதில் உதித்தது ஆனாலும் மற்றவர் இருந்ததைக் கருதி அதை அப்போது வெளியிடாமல், பின்னால், தனிமையில் கேட்டுக் கொள்ளலாம் என்று எண்ணி பேசாமல் இருந்து விட்டான். ரமாமணியம்மாள், இடும்பன் சேர்வைகாரன் முதலியோர் மன்னார்குடி வேலாயுதம் பிள்ளை முதலியோ ருக்குக் கெடுதல் செய்யும் கருத்தோடு சென்னைக்கு வந்திருக்கிறார்கள் என்ற விஷயம் போயிக்குத் தெரியாது ஆனாலும், அவர்கள் மாசிலாமணியின் தூண்டுதலின் மேல் ஏதோ காரியார்த்தமாக சென்னைக்கு வந்திருக்கிறார்கள் என்று மாத்திரம் அவன் தனக்குத்தானே யூகித்துக் கொண்டிருந்தான். அவர்கள் எல்லோரும் சர் சவலை ராமசாமி முதலியாரது சத்திரத்தை