பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/287

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

285

இருப்பது பார்ப்பதற்கு நிரம்பவும் அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கிறது. அது உனக்கே இருக்கட்டும். என் கையில் இருக்கும் இன்னொரு மோதிரத்தை உன் சம்சாரமாகிய ரமாமணியம்மாளுக்குக் கொடுத்துவிடப்போகிறேன்” என்று அன்பொழுகக் கூறினாள்.

பக்கிரியா பிள்ளை தான் கேட்டது பொய்யோ மெய்யோ என்று சந்தேகித்தவனாய் மனங்கொள்ளா ஆனந்தமும் பூரிப்பும் அடைந்து தான் எவ்வித மறுமொழி சொல்வது என்பதை அறியாதவனாய்ச் சிறிது நேரம் தத்தளித்த பிறகு, “அம்மா! இரண்டாயிரம் ரூபாய் பெறத்தக்க மோதிரத்தை எனக்குக் கொடுக்கிறீர்களே! இது நியாயமா? அதுவுமன்றி, உங்கள் புருஷருடைய ஞாபகார்த்தமாய் வைத்திருப்பதாகச் சொன்னீர்களே” என்றான்.

நீலலோசனியம்மாள், “ஓகோ உனக்கு உண்மை தெரியாது போலிருக்கிறது. என்னுடைய வரலாறுகளை எல்லாம் நான் அவர்களிடம் தெரிவித்ததை அவர்கள் உன்னிடம் சொல்ல சந்தர்ப்பம் ஏற்படவில்லை போலிருக்கிறது. என்னிடம் ரொக்கமாக ஐந்து லட்சம் ரூபாய் இருக்கிறது. அதோடு மாசம் நூறு ரூபாய் என் ஜீவனத்திற்காக வருகிறது. எனக்குக் குழந்தை குட்டிகள் யாரும் இல்லை. உன்னையும் ரமாமணியம்மாளையும் நான் என்னுடைய் அபிமானக் குழந்தைகளாக வளர்த்துக் கொள்ளப் போகிறேன். நான் இனி உங்களுடைய ஜாகையிலே தான் இருக்கப் போகிறேன். இனி என்னுடைய சொத்து முழுதும் உங்களுடையது. நான் ஞாபகார்த்தமாக வைத்திருக்கும் இந்த இரண்டு மோதிரங்களும் உங்கள் இருவருடைய கைகளிலும் இருப்பதுதான் பொருத்தமானது. உங்கள் இருவரையும் நான் என் புருஷருடைய பிரதிநிதிகள் போல பாவிப்பதால், உங்கள் இருவரையும் நான் பார்க்கும் போது, இனி எனக்கு அவருடைய ஞாபகம் வரவேண்டும் ஆதலால், மோதிரங்கள் உங்களிடத்திலே தான் இருக்க வேண்டும்” என்றாள்.

அவள் கூறியதைக் கேட்ட பக்கிரியா பிள்ளை அது கனவோ நினைவோ என்று சந்தேகித்தான் ஆயினும், ரமாமணியம்மாள் முதலியோர் அந்த அம்மாளிடம் காட்டும் அத்யந்த வாஞ்சையை