பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

289

மகிழ்ச்சியும் புன்னகையும் தோற்றுவித்த வண்ணம், “நாலுமணி வரையில் வெயிலாக இருந்தது. அதற்கு மேல்தான் புறப்பட்டோம். குதிரை மெதுவாக வந்தது. அங்கேயே இன்று இருந்து நாளைக்கு வரலாம் என்று கூட நான் நினைத்தேன். ஆனால் உங்களை விட்டுப் பிரிந்து போய் அவ்வளவு நேரம் இருந்தது மனசில் ஒருவித வேதனையை உண்டாக்கிக் கொண்டு இருந்தது ஆகையால், புறப்பட்டுவிட்டோம்” என்று கூறிய வண்ணம் உள்ளே வந்து சேர்ந்தாள். பக்கிரியா பிள்ளையும் கீழே இறங்கி, வண்டிக்காரனை அனுப்பிவிட்டு உள்ளே வந்தான். அப்போது இடும்பன் சேர்வைகாரன் சத்திரத்தின் வெளித் திண்ணையில் உட்கார்ந்திருந்தான் ஆதலால் பக்கிரியா பிள்ளை தனது கையில் அழகாக ஜ்வலித்துக் கொண்டிருந்த வைர மோதிரத்தை ரகசியமாக ரமாமணியம்மாள் முதலியோருக்குக் காட்டி நீல லோசனியம்மாள் அதைத் தனக்கே கொடுத்துவிட்டதாகவும், இன்னொன்றை ரமாமணியம்மாளுக்குக் கொடுக்க உத்தேசிப்பதாய்ச் சொன்னதாகவும் தெரிவித்தான். அதைக் கேட்டு அவர்கள் நீலலோசனியம்மாள் இயற்கையிலேயே பெருந்தன்மை வாய்ந்தவள் என்றும்; அவள் உண்மையிலேயே தங்கள் விஷயத்தில் அளவற்ற வாஞ்சையும் மதிப்பும் வைத்திருக்கிறாள் என்றும், தாம் அவளை ஏமாற்றி, அவளிடம் உள்ள ஐந்து லட்சம் ரூபாயையும் அபகரிப்பது சுலபத்தில் கைகூடி விடும் என்றும் தமக்குள் நினைத்து மிகுந்த மகிழ்ச்சியும் குதுகலமும் அடைந்து நீலலோசனியம்மாளை முன்னிலும் பன்மடங்கு அதிக கனிகரமாகவும், மரியாதையோடும் உவப்போடும் உபசரித்ததன்றி, அன்றைய தினம் அவள் எவ்வித ஆட்சேபனையும் சொல்லாமல், அவளுக்காக தாம் தயாரித்திருந்த முதல் விருந்தை உண்டு தங்களை மகிழ்விக்க வேண்டும் என்று வருந்தி வருந்தி வேண்டிக் கொண்டனர். நீலலோசனியம்மாள், தனக்கு உண்மையில் பசியே இல்லை ஆயினும், அவர்கள் அவ்வளவு பிரியமாகச் சொல்வதைக் கருதிதான் சொற்ப ஆகாரம் பார்ப்பதாகக் கூறி அவர்களது வேண்டுகோளுக்கு இசைந்தாள். ஆனால், தானும் விசாலாக்ஷியம்மாளும் கடைசியில் ஒன்றாக உட்கார்ந்து உண்ணலாம் என்றும், முதலில் மற்றவரை உட்கார வைத்துத் தாம்மா.வி.ப.II-19