பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

298

மாயா விநோதப் பரதேசி

அன்றைய இரவு சுமார் 9-மணி சமயம் இருக்கும்; ரமாமணி ம்மாள், அவளது தாய் தந்தையர், போயி, பக்கிரியா பிள்ளை ஆகிய ஐவரும் கோமளேசுவரன் பேட்டையில் கந்தசாமியின் ஜாகை வாசலை அடைந்தனர். அது பெருத்த மெத்தை வீடாகத் தோன்றியது. அதோடு, அதன் வெளிப்பக்கத்தில், வாழைமரங்கள், பந்தல், தோரணங்கள் முதலிய கலியாண அலங்காரங்கள் நிறைந்திருந்தன. அவைகளைக் கொண்டே நம்மவர் அதுதான் கந்தசாமியின் ஜாகையென்று உணர்ந்து கொண்டனர். ஆனால் வாசல் கதவு மாத்திரம் மூடப்பட்டு வெளிப்பக்கத்தில் தாளிடப் பெற்றிருந்தது. மனிதர் ஒருவர்கூடக் காணப்படவில்லை.

ரமாமணியம்மாளின் தந்தை எதிர்த்த வீட்டுத் திண்ணையில் இருந்த ஒரு மனிதரோடு பேசி, அன்று நிச்சயதார்த்தம் நடந்ததா என்றும் கலியாண வீட்டில் மனிதரே யாரும் இல்லாததன் காரணத்தையும் கேட்க, அந்த மனிதர், “ஐயா! எனக்கு நிச்சயமான சங்கதி எதுவும் தெரியாது; கலியாணப் பிள்ளை நாலைந்து தினங்களாய்க் காணப்படவில்லையாம். பந்தல் போட்டு அலங்காரம் செய்யும்படி அவர் ஒருவரிடம் பேசிப் பணம் கொடுத்திருந்தாராம். அவர் தம்முடைய ஒப்பந்தப்படி பந்தல் முதலியவைகளைப் போட்டு விட்டுப் போய்விட்டார். வெளியூரில் இருந்து பிள்ளையின் தாய் தகப்பன்மார் வந்து இரண்டு மூன்று தினங்களாய் இங்கே இருந்தார்கள். இன்று மத்தியானந்தான் அவர்கள் புறப்பட்டு ஊருக்குப் போய்விட்டார்கள் போலத் தோன்றுகிறது. இந்தப் பந்தல் நேற்று மாலையில்தான் போடப்பட்டது. காணாமல் போன பையன் ஒருவேளை இன்றாவது வரமாட்டானா என்றும், வந்தால் நிச்சயதார்த்தத்தை நடத்திவிடலாம் என்றும் அவனுடைய தாய் தகப்பன்மார் நினைத்து, பந்தல் போட்டதைத் தடுக்காமல் இருந்தார்களோ அல்லது, அவர்கள் தடுத்தும், கண்டிராக்டர் அதைக் கேளாமல் தம்முடைய ஒப்பந்தப்படி முடித்துப் பணத்தை வாங்கிவிட வேண்டும் என்று நினைத்து இந்த அலங்காரங்களை எல்லாம் செய்து வைத்தாரோ என்னவோ தெரியவில்லை. கலியாணப் பிள்ளைக்குச் சமையல் செய்து போட்டுக் கொண்டிருந்த வேலைக்காரி சமையலறையை மாத்திரம் பூட்டிக் கொண்டு