பக்கம்:மாய வினோதப் பரதேசி 2.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

305

சம்பந்தத்தை விலக்கச் செய்ய வேண்டும் என்ற ஒர் எண்ணம் அவளது மனதில் உதித்தது. ஆகவே அவள் தனது தந்தையை நோக்கி, “அப்பா அந்த கொடிமுல்லையம்மாள் சொன்ன வரலாற்றைக் கேட்ட முதல், இந்த மன்னார்குடியாரை நேரில் பார்க்க வேண்டும் என்றும், இவர்களுடைய குணாதிசயங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்றும் ஓர் அவா என் மனசில் இருந்து வருகிறதாகையால், அவர்கள் வருவது இந்தச் சந்தர்ப்பத்திற்கு ஏற்றதாகவே இருக்கிறது. அவர்கள் எல்லோரையும் நம்முடைய பங்களாவிற்கே அழைத்துக் கொண்டு வாருங்கள். அவர்கள் இங்கேயே தனியான ஒரு விடுதியில் செளகரியமாய் இருக்கட்டும்” என்றாள்.

பட்டாபிராம பிள்ளை, “நானும் அப்படித்தான் எண்ணுகிறேன். ஆனால், அவர்களுக்குச் சொந்தமான வீடு ஒன்று கோமளேசுவரன் பேட்டையில் இருக்கிறது. அது பிரம்மாண்டமான மெத்தை வீடு. கந்தசாமி இருந்து படிப்பதற்கென்றே அந்த மாளிகையை அவர்கள் வாங்கி இருக்கிறார்கள்; அவர்கள் அநேகமாய் அங்கேதான் போய் இறங்குவார்கள். இருந்தாலும், நான் அவர்களை இவ்விடத்திற்கே அழைத்துப் பார்க்கிறேன். அவர்களுக்காக எட்டு மனிதர்கள் உட்காரத் தகுந்த மோட்டார் வண்டி ஒன்று அமர்த்தி வைக்கப் போகிறேன். அவர்கள் இங்கே வர இனங்கினால், அவசியம் அழைத்துக் கொண்டு வந்து விடுகிறேன்” என்றார்.

அதைக் கேட்டு சிறிது நேரம் சிந்தனை செய்த மனோன்மணியம்மாள், “அவர்கள் இங்கே வராமல் கோமளேசுவரன் பேட்டைக்கே போய்விட்டால், தான் அவர்களைப் பார்ப்பதற்குச் சந்தர்ப்பம் கிடைக்காமல் போய்விடும். ஆகையால், நானும் நாளைய தினம் காலையில் உங்களோடு எழும்பூர் ரயில்வே ஸ்டேஷனுக்கு வருகிறேன்” என்றாள்.

பட்டாபிராம பிள்ளை மிகுந்த வியப்படைந்து, “அம்மா! அப்படிச் செய்வது தவறு. நீ அவர்களுடைய வீட்டில் வாழ்க்கைப் படப்போகிற பெண்; அவர்களுக்கெதிரில் நீ அடங்கி வொடுங்கி மறைவாக இருக்க வேண்டும். அதுதான் நம்முடைய பூர்விகர்களின் குலாசாரம். அந்த விஷயத்தில் எல்லாம், அவர்கள்மா.வி.ப.II-20